138
தென் மாகாணத்தின் மூன்று வெவ்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளின் போது, கணினி குற்றங்களில் ஈடுபட்ட 198 வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிதிகம, ஹிக்கடுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.
இதன்போது, இந்தியர்கள் 174 பேரும் நேபாளிகள் 24 பேருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்தமை, சுற்றுலா விசாவில் வருகை தந்து சட்டவிரோதமாக தொழில் புரிந்தமை, வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை உடமையில் வைத்திருந்தமை, கணினி குற்றங்கள் சட்டத்தின் கீழ் வரும் பாரிய மோசடிகளில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை செய்திகள்
You Might Be Interested In
- ஆண்டுகள் பதினேழு கடந்த போதும் – அணையவில்லை அந்த அழுகுரல்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
- மிஹிந்தலை ரஜ மகா விகாரை வளாகத்தில் தொல்லியல் துறையின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
- 17 ம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள் – பிரித்தானியா
- திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகமெங்கும் டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடல்
- மன்னார் காற்றாலை: மக்கள் தொடர்ந்தும் அரசுக்கு எதிராக போராடுவார்கள் – வி.எஸ்.சிவகரன்
- “சார்லி கிர்க் படுகொலையை கொண்டாடிய அயல்நாட்டினர், நாடு கடத்தப்பட உள்ளனர்.” – மார்கோ ரூபியோ
இச்சம்பவம் குறித்து மிதிகம மற்றும் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
You Might Be Interested In