54
திருநெல்வேலி – சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை, இதுவரை 16 பெட்டிகளுடன் இயங்கி வந்தது. 20 பெட்டிகளுடன் புதிய ரயில் இயக்கம் நேற்று தொடங்கியது.
காலை 6.05 மணிக்கு திருநெல்வேலியில் புறப் பட்டு மதியம் 1.55 மணிக்கு சென்னை எழும்பூர் நிலை யத்தை சென்றடையும் இந்த ரயில், அதிநவீன வசதி மற்றும் அதிவேகத்தால் பொதுமக்களின் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுவரை இயக்கப்பட்ட 16 பெட்டி நீல நிற ரயிலுக்கு பதிலாக, காவி நிறத்தில் உள்ள 20 பெட்டிகளைக் கொண்ட புதிய ரயில் கடந்த வாரமே திருநெல்வேலி வந்தது. புதிய ரயில் நேற்று முதல் சேவையை துவக்கியது.
ஆயுத பூஜை, விஜயதசமி, தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கம் தொடங்கியிருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
You Might Be Interested In
- கோவையில் பெண் காவல் அதிகாரியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எஸ்.பி கைது!
- இன்று கந்தசஷ்டி ஆரம்பம்
- தவெக வின் சாக்கடை அரசியல்!
- தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- நேரலை LIVE🔴திலீபன் நினைவேந்தல் மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் !
- சீமான் – ஸ்டாலின் சந்திப்பு ! தற்செயலா ? அரசியலா ? அவதூறுகளா ?
You Might Be Interested In