சென்னையில் இன்று (செப் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்வது உள்ளிட்ட காரணங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், ஆபரண தங்கம் கிராம், 10,510 ரூபாய்க்கும், சவரன், 84,080 ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று (செப் 26) தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் உயர்ந்து, 10,550 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 320 ரூபாய் அதிகரித்து, 84,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (செப் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.85,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,640க்கு விற்பனை ஆகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 அதிகரித்துள்ளது.
- ஆனந்தபுர மாவீரர்களின் 17வது ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வு பெல்ஜியத்தில் நடைபெற்றது.
- ஒரே வாரத்தில் நான்காவது ரயில் சம்பவம்: ஸ்பெயினில் பாதுகாப்பு மீதான கவலை அதிகரிப்பு
- திருச்சிராப்பள்ளி விவசாயிகள் அதிரடி போராட்டம்: நிறைவேறாத வாக்குறுதிகள், அரசு புறக்கணிப்பு குற்றச்சாட்டுகள் தீவிரம்
- தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- இலங்கை அரசாங்கம் எரிபொருள் விலைகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றுகிறது, – முஜிபுர் ரஹ்மான்.
- இலங்கை அரசு வழங்கும் வெள்ள நிவாரணத் தொகை (ரூ.10,000 – 50,000) பெறுவது எப்படி?