தென்கிழக்கு வங்கக்கடலில் மோந்தா புயல் உருவாகி உள்ளது. ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினம் இடையே, காக்கி நாடாவுக்கு அருகே தீவிர புயலாக இன்று (அக்டோபர் 28) மாலை அல்லது இரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளது.

தற்போது மோந்தா புயல் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நெருங்கி வருகிறது. இதனால், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று அக்டோபர் 28ம் தேதி விசாகப்பட்டினம் வழியாகச் செல்ல திட்டமிடப்பட்டிருந்த 43 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்து செல்லும் அனைத்து இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
- தமிழக மீனவர்களால் தாக்கப்பட்ட பரித்திதுறை மீனவர் வழக்கில் நீதி கிடைக்கச் செய்யுமாறு ஆளுநரையும் உபாலி சமரசிங்கவையும் ரவிகரன் எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.
- வீரவணக்க நிகழ்வு 2026 – பிரான்சு
- 15 வயது சிறுமி காணாமல் போயுள்ளார்; இலங்கை காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது!
- காசா நெருக்கடி: வெள்ளம் கூடார முகாம்களை சிதைத்தது – உதவி தடைகள் மனிதாபிமான நிலையை மோசமாக்குகின்றன
- சிங்கப்பூர், மலேசியாவில் தைப்பூச கொண்டாட்டங்கள்.
- இலங்கையின் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் தரையிறக்கப்பட்டன.
இன்று (அக்டோபர் 28) விஜயவாடா விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதன் விபரம் பின்வருமாறு:
* IX 2819 விசாகப்பட்டினம்- விஜயவாடா
* IX-2862 விஜயவாடா- ஹைதராபாத்
* TX-2875 பெங்களூரு- விஜயவாடா
* TX-2876 விஜயவாடா- பெங்களூரு
* IX-976 ஷார்ஜா-விஜயவாடா
* IX-975 விஜயவாடா-ஷார்ஜா
* IX2743 ஹைதராபாத்-விஜயவாடா
* T X-2743 விஜயவாடா-விஜாகாடா