யாழ்ப்பாணம் – உடுவில் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த மாணவி 2வது மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவமானது வியாழக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.
இது கறித்து மேலும் தெரியவருகையில்:
முல்லைத்தீவை சேர்ந்த 14 வயதுடைய குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவிகள் விடுதியில் கடந்த ஒரு வருட காலமாக தங்கி நின்று கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் அவர் விளையாட்டு ஒன்றில் பங்குபற்றி முதலிடம் பெற்றுள்ளார். இதனால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிடம் இருந்து விலகி இருந்தனர். இதன் காரணமாக மனமுடைந்த மாணவி விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததால் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட போது தனது வாக்குமூலத்தில் குறித்த மாணவி இதனை தெரிவித்துள்ளார். படுகாயம்டைந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
- தமிழீழத்தில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி மற்றும் ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் நினைவேந்தல்!
- முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியான மழை காரணமாக 21,863 குடும்பங்களை சேர்ந்த 64098 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
- சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் ஆரம்பநாள் 17.10.1995
- கப்டன் அஜித்தா | 22.12.1990
- தேசத்தின் இறப்பு பிறப்பாகிறது
- நினைவு வணக்கம் – நவம்பர் 11