நாடளாவிய ரீதியில் செப்டெம்பர் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 02 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 3,264 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 1045 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 1149 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் 35பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 910 பேரும், கஞ்சா செடிகளுடன் 32 பேரும், போதை மாத்திரைகளுடன் 76 பேரும், சட்டவிரோத சிகரட்டுகளுடன் 17 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 01 கிலோ 836 கிராம் 082 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 02 கிலோ 074 கிராம் 786 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 33 கிலோ 38 கிராம் 581 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருளும், 12 கிலோ 314 கிராம் 148 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 97870 கஞ்சா செடிகளும், 7881 போதை மாத்திரைகளும், 2221 சட்டவிரோத சிகரட்டுகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
- கிவுல்ஓயா திட்டம் சிங்கள குடியேற்றத்தை இலக்காக கொண்டது; அமைச்சரவை தீர்மானம் மீள்பரிசீலிக்கப்பட வேண்டும் – கஜேந்திரகுமார்
- கத்தார்–சவுதி எரிசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதால் வளைகுடா பதற்றம் தீவிரம்
- இலங்கையில் இணையவழி பாலியல் தொழில்துறை வளர்ந்து வருகிறது.
- ஒரு சந்தர்ப்ப வாதியின் கதை ! மனசாட்சியை எங்கே தொலைத்தீர்கள் ?
- உலகளாவிய AI தவறான பயன்பாட்டுக்கு எதிராக எழும் கண்டனம் — ஆப் ஸ்டோர் நடவடிக்கைக்கான கோரிக்கை அதிகரிப்பு
- எனது கவலையெல்லாம் : வந்துசென்ற கூட்டம் பற்றியது அல்ல, வாழ்ந்த கோயில் பற்றியது !