மன்னார் பிரதேசச் செயலாளர் பிரில் உள்ள பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை தெற்கு கடற்கரை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (06.10.2025) மாலை காற்றாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க குழு ஒன்று வருகை தந்த நிலையில் மக்களின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த குழு அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.

பேசாலை கிராமத்திற்கு உட்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் காற்றாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க இயந்திரங்களுடன் குழு ஒன்று வருகை தந்ததை அறிந்து கொண்ட பிரதேச மக்கள் குறித்த பகுதிக்குச் சென்று வருகை தந்த குழுவினருடன் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டனர்.
இதன் போது பேசாலை பொலிஸாரும் அவ்விடத்திற்கு சென்ற நிலையில் அங்கு பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் காற்றாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க இயந்திரங்கள் ஏற்றி வந்த டிராக்டர் இயந்திரத்தை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போர் விளிம்பில் பிரிட்டன்: கியர் ஸ்டார்மர், உக்ரைன் மற்றும் பரந்த போரின் நிழல்
- “இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என யாழ்ப்பாண கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- தமிழகத்தில் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1480 உயர்வு!
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது, இதனால் இந்தியா தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
- ‘இந்தியப் பிரதமரைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்’: தமிழக முதல்வரின் கடிதம்
- ஐரோப்பிய ஒன்றியம்–இந்தியா வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்
மக்களின் தொடர் எதிர்ப்பை தொடர்ந்து வந்த குழுவினர் அவ்விடத்தில் இருந்து பின்வாங்கிச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.