மாநிலம் முழுதும் நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள், 14,141 ஏரிகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சேலம், ஈரோடு, தேனி, மதுரை, திருவண்ணாமலை, கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பல அணைகளில் இருந்து பாதுகாப்பு கருதி, உபரி நீர் வெளியேற்றும் பணிகளில், நீர்வளத்துறையினர் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். அணைகள் திறப்பையும், நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதையும் பார்ப்பதற்காக, பொது மக்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்கு செல்வது வழக்கம்.
இதனால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, பாதுகாப்பு கருதி, நீர்நிலைகளுக்கு அருகே பொது மக்கள் செல்வதற்கு, நீர்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர். பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள முக்கிய அணைகளுக்கு, போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டு உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரிகளுக்கு, ‘ஷிப்ட்’ அடிப்படையில், 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
- கொழும்பில் நீர்வெட்டு நாளை வியாழக்கிழமை (23) காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.
- திமுக-காங்கிரஸ் கூட்டணி “கல்லாப்பெட்டி கூட்டணி” என்று தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பிரசார நிர்வாகக் குழு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறினார்.
- இந்தியா முழுவதும் உணவகங்கள் ஆறு ஆண்டுகளாக தங்கள் வருமானத்தை மறைத்து, ரூ.70,000 கோடி வரை வரி ஏய்ப்பு.
- கடலடி நிழல் யுத்தம்: நேட்டோ–ரஷ்யா பதற்றம் ஆபத்தான புதிய கட்டத்தில்
- செந்தளிர் விளையாட்டு விழா 2026 – பின்லாந்து தமிழர் பேரவை
- தெருநாய்களுக்கு 72 தங்குமிடங்கள் அமைக்கும் திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.