இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
தெற்கு மியான்மர் கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரண மாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

அடுத்த 48 மணி நேரத்தில் மியான்மர்- வங்கதேச கடற்கரையில் வடக்கு, வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வரும் 7ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு, வரும் 5ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
- தமிழக மாவட்டங்களில் விவசாயம், ரயில் பராமரிப்பு, சாதி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் குடிமை சவால்கள் தொடர்ச்சி
- கடலூரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் கண்காணிப்பாளர் SIR பணிகளை ஆய்வு செய்தார்
- தமிழீழமே எமக்கு வேண்டுமென பயணிக்கும் ஈருருளிப்பயணம் லாண்டாவ் நோக்கி பயணிக்கிறது
- Brampton’s Recognition and the Historical Study of Tamil National Identity
- காங்கோவில் படகு கவிழ்ந்ததில் 86 பேர் இறந்தனர்.
- ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட போதிலும் “ரேபிஸால் இறப்புகள் ஏன் ஏற்படுகின்றன ?”