Sunday, November 1, 2026
Home தமிழகம்சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

by Amizhthu

கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று உயர்வை சந்தித்து உள்ளது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த நவ.,03ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90,800க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11.350க்கு விற்பனை ஆனது.

நேற்று முன்தினம் (நவ., 04) ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,250க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.165க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று (நவ.,05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.11,180க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.163க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று (நவ.,06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.90 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 11,250க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.164க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 குறைந்த நிலையில், இன்று உயர்வை சந்தித்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Reply