ஹரியானாவின் குருகிராமை தலைமை இடமாக கொண்டு செயல்படும், ‘இண்டிகோ’ விமான நிறுவனத்துக்கு நேற்று பிற்பகல் 3:30 மணியளவில், ‘இ – மெயில்’ மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அதில், ‘சென்னை, டில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் குண்டு வெடிக்கும்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டது. எனினும் வெடிகுண்டுகள் சிக்கவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
இதை தொடர்ந்து, மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து உத்தர பிரதேசத்தின் வாரணாசிக்கு நேற்று சென்ற, ‘ஏர் இந்தியா எக்ஸ் பிரஸ்’ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
- புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் அலங்கரிப்பு பணி நடைபெற்று மாவீரர் நாள் அனுஷ்டிக்க தயார் நிலையில் இருக்கின்றது.
- வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு எதிரான கட்டாய தடுப்புக்காவல் மற்றும் அடக்குமுறை குறித்து ஐநா தீவிர கவலை
- அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்டார்மர் ‘இங்கிலாந்தை சீரமைக்க வேண்டும்’ எனக் கூறிய கருத்து கவனம் ஈர்க்கிறது
- வவுனியாவில் 3598 பேர் இடம்பெயர்ந்த நிலையில் 47’இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
- உரத் தட்டுப்பாடு மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக விவசாயிகள் பெரும் இழப்புகளைச் சந்திக்கின்றனர் – இலங்கை தேசிய விவசாய ஒன்றியத்தின் தகவல்!
- ‘செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில்’ உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு.பாஸ்கரன்
வாரணாசி விமான நிலையத்துக்கு, இ – மெயிலில் வந்த இந்த மிரட்டலில், விமானத்தில் வைக்கப்பட்டுள்ள குண்டு வெடித்து நடுவானில் விமானம் சிதறும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, பறந்து கொண்டிருந்த விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. வாரணாசி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு விமானத்தில் இருந்த பயணியர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.