விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் பழைய பூங்கா வளாகத்தில் அண்மையில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களால் நாட்டப்பட்டது.

இந்நிலையில் பழைய பூங்காவுக்கு மத்தியில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைத்தல் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகள் என்ற பெயரில் நடைபெறும் சகல நடவடிக்கைகளுக்கும் எதிராக கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடைக் கட்டாணை ஒன்றை வழங்கியது.
இந்நிலையில் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு தேவை என்பதை வலியுறுத்தி விளையாட்டு துறைசார்ந்தவர்கள் பேரணியை முன்னெடுத்தனர்.
சென் போஸ்கோ ஆரம்ப பாடசாலை முன்பாக கூடிய போராட்டக்காரர்கள் அங்கிருந்து பேரணியாக பழைய பூங்கா பகுதிக்கு சென்று அப்பகுதியை பார்வையிட்டதுடன் இறுதியில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு சென்று ஜனாதிபதிக்கான மகஜரை மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடம் கையளித்தனர்.
- திருகோணமலை, குச்சவளி காவல் பிரிவுக்கு உட்பட்ட சலப்பையாறு பகுதியில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
- முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிலி பகுதியில் யாருமற்ற வீட்டில் இருந்து ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- அகவை வாழ்த்து – நவம்பர் 08
- நினைவு வணக்கம் – செப்டம்பர் 30
- பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா அவர்களிற்கு “மாமனிதர்” என மதிப்பளிப்பு – அனைத்துலகத் தொடர்பகம்.
- சிங்கத்தின் குகையில் அரசோச்சிய புலிக்குரல் “மாமனிதர் காசிநாதர் காங்கேசர் பொன்னம்பலம்” 05 ஜனவரி 2000