மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கையை மீண்டும் இன்று புதன்கிழமை (17-12-2025) அச்சுப் பிரதியாக ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் வழக்கு 2026 ஆம் வருடம் பங்குனி மாதம் 31 ஆம் நாளன்றுக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றால் திகதியிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை (16-12-2025) எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து இன்றையதினம் சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து அச்சுப் பிரதியாக்கம் செய்யப்பட்ட அறிக்கையை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மீண்டும் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (17-12-2025) சமர்பித்திருந்தனர்.
இதையடுத்து அறிக்கையின் விவரங்கள், சாட்சிகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்ட நீதிபதி மேலதிக சாட்சிகளின் வாக்குமூலங்களை குற்றத்தடுப்பு பிரிவினர் பெறவேண்டும் என்ற கோரிக்கையாலும், அகழ்வுக்கான பணிகளை முன்னெடுக்கும் புறச்சூழல் தற்போது இல்லாததாலும், அவ்வாறான காரணிகளை கருத்தில் கொண்டு குறித்த வழக்கு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாளன்றுக்கு திகதியிடப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- பெண் விடுதலை என்றால் என்ன? தமிழீழ தேசியத் தலைவர் அளித்த விளக்கம்!
- ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதிக்கு DFCC வங்கி ரூ. 50 மில்லியனை நன்கொடையாக வழங்கியது.
- ‘நாளை மாலை கொழும்பில் பாரிய போராட்டம்.’ – மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர்
- தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் ஒரு குழுவை அமைத்துள்ளது.
- ஐ.நா மனித உரிமைகள் பேரவை பாரபட்சமின்றியும், நியாயத்தின் அடிப்படையிலும் செயல்பட வேண்டும் – இலங்கை அரசு ஆதரவு நாடுகள்
- காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்றுவதற்காக, தமிழக வெற்றிக் கழகக் கட்சித் தலைமை, இதுவரை யாரும் வழங்காத சலுகைகளை வழங்க முன்வந்துள்ளது.