மேற்காசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல் காலித் மற்றும் ஓமன் சுல்தான் ஹாய்தம் பின் தாரிக் ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தன் கவலையை தெரிவித்தார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் துவங்கியுள்ளதை அடுத்து, மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில் ஓமன் சுல்தான் ஹாய்தம் பின் தாரிக் மற்றும் குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல் காலித் அல் ஹமித் அல் சபா ஆகியோருடன் தொலைபேசியில் பிரதமர் மோடி நேற்று பேசினார்.
அப்போது அந்த நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தன் கவலையை தெரிவித்தார். மேலும் அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலம் குறித்தும் கேட்டறிந்தார்.
முன்னதாக கடந்த இரண்டு நாட்களாக பஹ்ரைன் மன்னர் மற்றும் சவுதி அரேபியா பட்டத்து இளைவரசர் ஆகியோரையும் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த நாடுகள் மீதான தாக்குதலுக்கு கவலை தெரிவித்தார். இது தவிர ஜோர்டான் மன்னர் அப்துல்லாவுடனும் மோடி பேசினார்.
- மத்திய பிரதேசத்தில் பள்ளி சீருடையுடன் மதுபான கடைக்கு சென்று, மது பாட்டில்களை வாங்கிய மாணவியர்.
- இந்தியா–ஜெர்மனி 19 ஒப்பந்தங்கள் கையெழுத்து: இந்திய பயணிகளுக்கு ஜெர்மனியில் விசா‑இல்லா டிரான்சிட்
- மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில், கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர்.
- ரஃபேல் போர் விமானத்தில் பயணித்தார் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு
- நவீன வசதியுடன் நெல் கொள்முதல்: ஆந்திர விவசாயிகளுக்கு ‘வாட்ஸ்அப்’ வழிகாட்டி
- இந்திய விமானப்படைக்கு 97 இலகு ரக தேஜாஸ் போர் விமானங்கள் வாங்க ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் போட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனும் மோடி பேசினார்.