136
மாரவில கடற்பரப்பில் கடற்படையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது, சுமார் 953 கிலோகிராம் கெண்டு இலைகள் அடங்கிய பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடலில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 27 சந்தேகத்திற்கிடமான மூடைகளை கடற்படையினர் சோதனையிட்ட போதே இந்தத் தொகுதி கண்டுபிடிக்கப்பட்டது.
கடற்படையினரின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக, பிடிபடுவதைத் தவிர்க்க கடத்தல்காரர்கள் இதனை கடலில் வீசிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட அனைத்து கெண்டு இலைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் உள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
You Might Be Interested In
- இலங்கையில் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.8 மில்லியனைத் தாண்டியுள்ளது – பேரிடர் மேலாண்மை மையம்
- ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் புதன்கிழமை (19.11.2025) இரவு உயிரிழந்துள்ளார்.
- தமிழீழ பெண்கள் எழிச்சி நாளும், 12 வேங்கைகளின் நினைவேந்தலும் – பெல்சியம்
- தமிழீழ தேசிய கொடி நாள்: City of Brampton மற்றும் மேயர் அலுவலகத்துக்கு எமது ஆழ்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
- அமெரிக்க ஜனாதிபதி புதிய அறிவிப்பை அறிவிக்கிறார்: நான் சீனாவுடன் நட்புறவை விரும்புகிறேன், ஆனால் நான் 155% வரி விதிப்பேன்
- லெப்.கேணல் வீரமணி | 24.05.2006
You Might Be Interested In