யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து திருட்டு நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் மீட்கப்பட்டுள்ளது.
இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (09-03-2026) இளைஞன் ஒருவர் 4 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் கடந்த பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி வீடொன்றில் ஒன்பதரை பவுண் தங்க நகைகள் மற்றும் 80 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பதனை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
அதன் அடிப்படையில், மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்த பொலிஸார் திருடப்பட்ட நகைகளில் ஒரு தங்கமாலை, ஒரு தங்க மோதிரம், ஒரு சோடி தங்கத் தோடு, 2 தங்க வளையல்கள், 2 தங்கப் பதக்கங்கள் என்பவற்றை கைப்பற்றியதுடன், 08 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.
- மாவீரர் குடும்ப உறவுகள் மதிப்பளித்தல் நிகழ்வு கொக்கட்டிச் சோலை
- மேஜர் தாரணி 23.01.1991
- அகவை வாழ்த்து – ஜனவரி 06
- திருகோணமலையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2025
- யாழ்ப்பாணம்: நிலத்தடி நீர் பாதுகாப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக நிலத்தடி குளம் தூர்வாரும் நடவடிக்கை.
- போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 41 கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேவேளை, திருடப்பட்ட தங்க மாலை ஒன்றினை நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைத்து பணத்தினை பெற்றமைக்கான பற்று சீட்டு ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதன் அடிப்படையில் அடகு வைத்த தங்க சங்கிலியை மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.