131
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான எரிபொருள்கள் ஞாயிற்றுக்கிழமை (22-03-2026) மீட்கப்பட்டன.
ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 4700 லீட்டர் டீசல், 800 லீட்டர் பெற்றோல் மற்றும் 400 லீட்டர் மண்ணெண்ணெய் என்பன யாழ். மாவட்ட குற்றதடுப்புபிரிவால் கைப்பற்றப்பட்டது.
இதன்போது சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You Might Be Interested In