| தமிழ் நாட்காட்டி மே 2026 | |
|---|---|
| அமாவாசை | 18-மே-2026 திங்கட்கிழமை |
| பௌர்ணமி | 01-மே-2026 வெள்ளிக்கிழமை 31-மே-2026 ஞாயிறு |
| கார்த்திகை | 16-மே-2026 சனிக்கிழமை |
| சஷ்டி விரதம் | 22-மே-2026 வெள்ளிக்கிழமை |
| சங்கடஹர சதுர்த்தி | 05-மே-2026 செவ்வாய்கிழமை |
| சதுர்த்தி | 20-மே-2026 புதன்கிழமை |
| பிரதோஷம் | 14-மே-2026 வியாழன் 28-மே-2026 வியாழன் |
| திருவோணம் | 09-மே-2026 சனிக்கிழமை |
| மாத சிவராத்திரி | 15-மே-2026 வெள்ளிக்கிழமை |
| ஏகாதசி | 13-மே-2026 புதன்கிழமை 27-மே-2026 புதன்கிழமை |
| அஷ்டமி | 09-மே-2026 சனிக்கிழமை 23-மே-2026 சனிக்கிழமை |
| நவமி | 10-மே-2026 ஞாயிறு 24-மே-2026 ஞாயிறு |
| அரசு விடுமுறை நாட்கள் | 01-மே-2026 வெள்ளிக்கிழமை மே தினம் 28-மே-2026 வியாழன் பக்ரீத் பண்டிகை |
| திருமண நாட்கள் | 08-மே-2026 வெள்ளிக்கிழமை தேய்பிறை 13-மே-2026 புதன்கிழமை தேய்பிறை 14-மே-2026 வியாழன் தேய்பிறை 18-மே-2026 திங்கட்கிழமை வளர்பிறை 28-மே-2026 வியாழன் வளர்பிறை 29-மே-2026 வெள்ளிக்கிழமை வளர்பிறை |
| திருவிழாக்கள் | 01-மே-2026 வெள்ளிக்கிழமை கள்ளழகர் வைகை எழுந்தருளல் 04-மே-2026 திங்கட்கிழமை அக்னி நட்சத்திரம் துவக்கம் 28-மே-2026 வியாழன் அக்னி நட்சத்திரம் முடிவு 28-மே-2026 வியாழன் பக்ரீத் பண்டிகை 30-மே-2026 சனிக்கிழமை வைகாசி விசாகம் |
இன்றைய ராசி பலன் 13 மே 2026 புதன்கிழமை
மேஷ ராசி அன்பர்களே,
மேஷ ராசி நேயர்களே, குடும்ப சுமை குறையும். தேவையான பொருட்களை வாங்கி சேர்க்க முடியும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
ரிஷப ராசி நேயர்களே,
ரிஷப ராசி நேயர்களே, உற்றார், உறவினர்களிடம் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். திருமணம் காரியம் கைகூடும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
மிதுன ராசி அன்பர்களே,
மிதுன ராசி நேயர்களே, மனதில் உள்ளதை தைரியமாக பேசுவது நல்லது. பிராத்தனைகள் நிறைவேறும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
கடக ராசி நேயர்களே,
கடக ராசி நேயர்களே, விருப்பப்படியே எல்லாம் நடக்க ஆரம்பிக்கும். பெற்றோர்கள் ஆதரவு வழக்கம் போல் இருக்கும். சொத்து விவகாரத்தில் இழுபறி நிலை நீடிக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்.
சிம்ம ராசி நேயர்களே,
சிம்ம ராசி நேயர்களே, பல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
கன்னி ராசி நேயர்களே,
கன்னி ராசி நேயர்களே, தியானம் மன ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும். பெரிய மனிதர்களால் ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
துலாம் ராசி நேயர்களே,
துலாம் ராசி நேயர்களே, மனதில் புது தெம்பும், தைரியமும் அதிகரிக்கும். புது விஷயங்களை கற்றுக்கொவதில் ஆர்வம் கூடும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
விருச்சிக ராசி நேயர்களே,
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது நன்மையை தரும். ஆன்மீக ஆர்வம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
தனுசு ராசி நேயர்களே,
தனுசு ராசி நேயர்களே, குடும்ப விஷயங்களில் கவனம் செலுத்தவும். பெரியோர்கள் சொல்லபடி கேட்டு நடக்கவும். புது நண்பர்கள் ஆதரவாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
மகர ராசி நேயர்களே,
மகர ராசி நேயர்களே, எப்போதும் இல்லாத மன சந்தோஷம் ஏற்படும். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்து போகவும். எதிரிகளின் பலம் வெகுவாக குறையும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
கும்ப ராசி நேயர்களே,
கும்ப ராசி நேயர்களே, எதிர்பார்ப்புகள் அதிகரித்து கொண்டு போகும். திட்டமிட்டபடி பயணத்தை மேற்கொள்ள முடியும். யாரிடத்திலும் விவாதம் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மீன ராசி நேயர்களே,
மீன ராசி அன்பர்களே, குடும்பத்தில் சாதகமான சூழல் இருக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். புதிய வாகன யோகம் அமையும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
தமிழ் ராசி பலன் வாரந்தோறும் 11-05-2026 To 17-05-2026

மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களால் சுற்றி இருப்பவர்கள் பயன் பெறுவர். எந்த ஒரு விஷயத்திலும் உடனடி முடிவுகள் என்பது சற்று சிரமத்தினைத் தரக்கூடும். குடும்ப பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவெடுத்துச் செயல்படுவது நலம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புது வீடு கட்டுவது தொடர்பாக தற்சமயம் முயற்சிகள் எடுக்கலாம். உடன்பிறந்தோருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பாராத பொருள் விரையம் ஏற்படும். கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பொது காரியங்களில் ஆர்வம் ஏற்படும். நண்பர்கள் சில நேரங்களில் விரோதமாக செயல்படலாம். பெற்றோர்களின் அறிவுரை உதவியாக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பொதுக் காரியங்களில் உங்களின் செயல்பாடுகள் சிறப்பான பலனை பெற்றுத் தரும். மனக்கவலைகள் அனைத்தும் மறையும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சீராகும். வீடு, மனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உருவாகும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு இருக்கும். உடல் நலனில் கூடுதல் கவனம் தேவை. புதிய நண்பர்களின் இணைவினால் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். வாகன பயணத்திலும், சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. இரவு நேர பயணங்களை குறைத்துக்கொள்ளவும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
பரிகாரம் : கிருஷ்ணரை வணங்கி வழிபடவும்.

மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, குடும்ப பொறுப்புகள் பெரிய சுமையாக வரும். உங்கள் மீது விமர்சனங்களைப் பற்றி கவலைகொள்ள வேண்டாம். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். உங்களுடைய எண்ணங்களும், திட்டங்களும் நல்லமுறையில் செயல்படும். குடும்பத்தில் அனாவசிய செலவுகளை தவிர்க்க பார்ப்பீர்கள். கணவன் மனைவி உறவில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு சீராகும். குடும்ப வேலை காரணமாக அண்டை மாநிலங்களுக்கு பயணம் செல்ல வேண்டிவரும். உடன்பிறந்தோர் ஆதரவாக இருப்பர். உறவினர்களால் ஒரு சில பிரச்னைகளை சந்திக்க நேரலாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு தோன்றி மறையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு.
பரிகாரம்: குல தெய்வத்தை வணங்கி வழிபடவும்

கடக ராசி அன்பர்களே
கடக ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக முடியும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். வீட்டில் சுபவிரயங்கள் ஏற்படும். ஒரு சிலர் வீடு, மனை விற்று அதில் லாபம் பெறுவர். குடும்பத்தில் அமைதி ஏற்படும். பொருளாதார பற்றாக்குறை இருக்காது. உடல் நலத்தில் சிறு சிறு பாதிப்பு ஏற்படலாம், எனவே கவனமாக இருக்கவும். உற்றார், உறவினர்களால் ஆதாயம் உண்டு. குடும்ப வருமானம் ஓரளவு சொல்லும்படி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் இல்லாமல் பார்த்து கொள்ளவும். உடன்பிறப்புகளுடன் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் அகலும். குடும்பத்தில் புது நபர்களின் வருகையால் செலவுகள் கூடினாலும் மகிழ்ச்சி உண்டாகும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிப்படவும்

சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார ராசி பலன் படி, குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் இனிதே நடக்கும். முக்கிய விசேஷயங்களில் கலந்துகொள்ள வேண்டிவரும். பல காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் ஆடம்பர செலவுகளை முடிந்தவரை தவிர்க்கவும். புது நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். புதிய வீட்டிற்கு இடம் மாற வேண்டிய சூழ்நிலை வரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. நடந்து முடிந்த விஷத்தை நினைத்து இப்போது கவலை பட்டு எந்த பயனும் இல்லை. மன நிம்மதிக்காக தினமும் தியானம் செய்வது நல்லது. உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : சூரிய பகவானை வணங்கி வழிபடவும்.

கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி நேயர்களே, இந்த வார ராசி பலன் படி, குடும்ப பிரச்சனைகளுக்கு சுமுகமான முறையில் தீர்வு கிடைக்கும். இது வரை பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு தீர்வு கிடைக்க போகிறது என்று தான் சொல்ல வேண்டும். பிறர் கைவிட்ட காரியத்தை திறம்பட செய்ய முடியும். அடுத்தவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கியிருப்பதும் கூடாது. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். கடன் நெருக்கடிகள் குறையும். உறவினர்களிடையே இருந்து வந்த மன கசப்பு நீங்கும். புதிய முயற்சிகள் எதிலும் தற்சமயம் ஈடுபட வேண்டாம். உத்யோகத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
பரிகாரம் : மஹாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்.

துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் செயல்களில், வேகமும், விவேகமும் இருக்கும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். முக்கிய காரியத்தில் ஏற்பட்ட முக்கிய தடைகள் நீங்கும் பிரயாணம் செய்வதிலும் ஆர்வம் உண்டாகும். பண விஷயங்களில் கறாராக இருக்கவும். கொடுக்கல், வாங்கலில் மனஸ்தாபம் வரலாம். குடும்பத்தினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிட்டும். கணவன் மனைவிடையே விட்டு கொடுத்து போகவும். பாலிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். யாரிடத்திலும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். குடும்பத்திற்கு தேவையான விஷயங்களை செய்து தர முடியும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் பாராட்டு மழை உண்டு. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்

விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, நீண்ட நாள் பிராத்தனைகளை தாமதமின்றி நிறைவேற்ற முடியும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி மனநிம்மதி ஏற்படும். உங்கள் சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். தொலைதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். உறவினர்களால் தர்மசங்கடமான சூழலுக்கு ஆளாக நேரிடும். குடியிருக்கும் வீட்டை மற்ற வேண்டிய சூழல் வரும். பழைய கடனை அடைப்பது குறித்த யோசனை வரும். உடல் நிலை முன்பை விட இப்போது நன்றாக இருக்கும். மற்றவர்களிடம் பேசும் வார்த்தைகளில் நிதானம் தேவை. எதிரிகள் உங்களை கண்டு ஒதுங்கி நிற்பர். உத்யோகத்தில் மதிப்பு கூடும். தொழில், வியாபாரம் விருத்தியடையும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்

தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்புகள் வரும். பொருளாதார ரீதியான பிரச்னைகளை சந்திக்கக் கூடும். வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்தால் குடும்பத்தில் சிக்கல் இல்லாமல் இருக்க முடியும். உடல் நலம் சீராகும். மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் நிறைய அலைச்சல் ஏற்படும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பெற்றோர்களின் ஆலோசனை கிடைக்கும். மற்றவர்களுக்கு ஜாமீன் போடுவதால் வீண் பழி ஏற்படலாம். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. புது தொழில், யோகம் அமையும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடவும்.

மகர ராசி அன்பர்களே
மகர ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, மனோதைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகளை ஏற்பட்டாலும், அதை எளிதாக சரி செய்து கொள்ள முடியும். எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. பிரியமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நெருங்கிய உறவினர்களுடன் சுமுக உறவு காணப்படும். புது வீடு மாற்றம் ஏற்படும். எதிர்பாரா மருத்துவ செலவுகள் வரும். உணவு கட்டுப்பாடு அவசியம். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். பிரபலங்களின் தொடர்பும், அவர்கள் மூலம் நிறைய ஆதாயமும் கிடைக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செழிப்படையும்.
பரிகாரம் : சாய் பாபாவை வணங்கி வழிபடவும்.

கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பேச்சு திறமையால் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்க முடியும். நீங்கள் விரும்பியது போல் எல்லாம் நல்ல முறையில் நடக்கும். ஓயாத அலைச்சல் காரணமாக உடல், சோர்வும் அசதியும் ஏற்படும். உடலில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு பின் சீராகும். ஏற்கனவே வாங்கிய கடனை அடைப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு. எதிர்பார்த்து நல்ல செய்தி காதில் வந்து விழும். மனதில் சந்தோஷமும், தெம்பும் அதிகரிக்கும். திருமண காரியம் விரைவில் கைகூடும். கணவன் மனைவிடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். பெற்றோர்கள் வழியில் சகாயமும், ஆதரவும் அதிகமாகும். தெய்வ பிராத்தனைகளை நிறைவேற்ற முடியும். உத்யோகத்தில் எதிர்பாராத திருப்புமுனை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்

மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் முழு மனதோடு ஈடுபவது நல்லது. ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும். தேக நலனில் கவனம் தேவை. சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். வெளியில் இருந்து வரவேண்டிய பணம் சரியான நேரத்தில் கைக்கு வரும். வாகனம் யோகம் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. எதிரிகளின் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். வாகன பயணத்தில் எப்போதும் கவனமாக இருக்கவும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும்.
பரிகாரம் : நவகிரகத்தை தினமும் 9 முறை சுற்றவும்.
மே மாத ராசி பலன்கள் 2026
| மே மாத ராசி பலன்கள் 2026 |
| மே மாத பலன்கள் – (2026 ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 18 முதல் வைகாசி மாதம் 17ம் தேதி வரை. வாக்கிய பஞ்சாங்கப்படி (01-05-2026 முதல் 31-05-2026) வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ,அந்தரம், கோச்சாரம் இவைகள் அனைத்தும் சாதகமாக இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே என்னுடைய அனுபவ பூர்வ உண்மை. கிரக நிலை மாற்றம் : 01.05.2026 – மேஷ புதன் 11.05.2026 – மேஷ செவ்வாய் 14.05.2026- மிதுன சுக்கிரன் 15.05.2026 – ரிஷபம் சூரியன் 26.05.2026 – கடக குரு ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஜோதிடர் ஆலந்தூர் A.வினோத் குமார், PH.D Astrology (அலைபேசி: 09003019831) |
மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த மாத தொடக்கம் ஆற்றலும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், முன் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மனதில் இருந்த பயம் நீங்கி தெளிவு பிறக்கும். புதிதாக ஏதாவது செய்ய ஆவல் எழும். பழைய பிரச்சனைகள் தீரும். ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் கூடும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். மனம் மகிழும்படியான விஷயங்கள் நடக்கும். நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்க தாமதமாகும். குடும்பத்தில் வெளி நபர்களால் இருந்த குழப்பம் நீங்கும். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத தடைகளும், பிரச்னைகளும் வந்தாலும் உடல் நிலையில் கவனம் தேவை. மனதிற்குள் சிறு சிறு சங்கடங்கள் வந்தாலும் அதை பெரிதுபடுத்த வேண்டாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கவலைகள் அகலும். குடும்ப விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். பண வரவு சுமாராக இருக்கும். கடன் நெருக்கடிகள் ஓரளவு குறையும். கொடுத்த வாக்கை தவறாமல் காப்பாற்ற முடியும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக்வருத்தங்கள் நீங்கும். எதிரிகளால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனம், போன்றவற்றால் அதிக செலவுகள் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 3,4,5 & 30 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் மங்களகரமானதாக இருக்கும். உங்கள் காரிய வெற்றிக்கு தேவையான அனைத்து உதவியும் கிடைக்கும். நிலுவையில் உள்ள பல வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். உங்களின் கடமைகளை திறம்பட செய்ய முடிக்க முடியும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். எந்த ஒரு காரியம் செய்யும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். குடும்பத்தில் முக்கிய விஷயங்களை திட்டமிட்டு செய்வது நல்லது. தீர்க்க முடியாத பிரச்னைகளை எளிதில் கூட எளிதில் தீர்க்க முடியும். போராட்டங்கள் பாராட்டுகளாக மாறும். சவாலான சூழலைச் சாதகமாக மாற்றும் மாதம். அடுத்தவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். குடும்ப விஷயங்களில் சிறு, சிறு பிரச்னைகள் இருந்தாலும் அது நாளடைவில் சரியாகும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. குல தெய்வ வழிபாடுகளை தவறாமல் மேற்கொள்ளவும். குடும்பத்தில் உள்ளவர்களால் சந்தோஷம் ஏற்படும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. உடன்பிறப்புகளிடம் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். பண நெருக்கடி ஓரளவு குறையும். பூர்வீக சொத்து விஷயங்களில் பிரச்னைகள் வந்து நீங்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் குறையும்.
சந்திராஷ்டமம் : 5,6,7,8 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உடல் சோர்வால் சிரமப்படக்கூடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் புது விஷயங்களை செயல்படுத்தும் எண்ணம் வரும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். எடுக்கும் முயற்சிகளில் தடை இருந்தாலும் மன உறுதியுடன் செயல்பட்டு வெற்றி பெற முடியும். புத்திசாதூரியம் மூலம் நிறைய சாதிக்க முடியும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் பாராட்டு கிடைக்கும். உடல் சோர்வு, அசதி நீங்கும். வீடு, மனை வாங்குவதில் சிறிய தடை இருக்கும். பெற்றோர்களின் ஆலோசனை கிடைக்கும். புது கடன் வாங்கி அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உடல் நிலையில் கவனம் தேவை. வாகன பராமரிப்பு செலவுகள் வந்து நீங்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். உடன்பிறப்புகளின் ஆதரவு பெருகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். பெண்களால் சில தொந்தரவுகள் வரும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் ஏற்படும். திட்டமிட்ட பயணங்களை தவிர்க்கவும். வாகனம் வாங்குவதை சற்று தள்ளி வைக்கவும். புதிய முடிவுகளையும், புதிய முயற்சிகளையும் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : 8,9,10 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் சிறப்பான ஒரு மாதமாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். நீண்ட கால பிரச்சனைகள் குறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். நிதி நிலைமை சீராக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். வீட்டு தேவைகளுக்கு கூடுதலாக செய்ய வேண்டிவரும். முக்கிய காரியங்களில் இருந்த தடை நீங்கும். எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அதை திறமையாக சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு, சிறு தடைகள் வந்தாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உடன்பிறப்புகளிடம் சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் உங்களிடம் அடிபணிந்து போவர். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். நீண்ட நாள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மற்றவர்கள் உங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லையே என ஆதங்கம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். உறவினர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து உயரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் பல தடங்கலுக்கு பின் முன்னேற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 10,11,12 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் இருந்து வந்த சஞ்சலம் நீங்கி மன மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தன்னம்பிக்கை வலுவடையும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைத்தாலும், செலவுகளையும் அதிகம் சந்திக்க நேரிடும். குடும்ப நலனுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவை எடுக்க அடுத்தவரின் ஆலோசனையை கேட்பது நல்லது. பொருளாதார சிக்கல் இருந்தாலும் அதை எதிர்கொள்ள முடியும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். எடுக்கும் முயற்சிகளில் சிறு, சிறு தடை பிரச்னைகள் வந்தாலும், தொடர்ந்து முயற்சி செய்யவும். உடன் பிறப்புக்கள் உதவிகரமாக இருப்பர். உறவினர்களால் சின்ன சின்ன மனக்கஷ்டங்கள் வந்து போகும். தெய்வ அனுகூலம் உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகள் விலகிச் செல்வர். நாள் பட்ட பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே பனிப்போர் ஏற்படும். வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். பிரபலங்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். புது நண்பர்களால் ஆதாயம் இருக்கும். மற்றவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். கடனாக கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். உங்களுக்கு எதிராக வரும் எதிர்ப்புகள் முற்றிலும் நீங்கும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். வேலையில் வெற்றியையும் காண முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
சந்திராஷ்டமம் : 12,13,14 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் நிதி நிலை வழக்கத்தை விட நன்றாகவே இருக்கும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். புது முதலீடுகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். இம்மாதத்தில் ஒரு சிலர் உங்களுக்கு எதிராக செயல்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிரியமானவர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொள்வதால் மனக்குறைகள் நீங்கும். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செலவுகள் அதிகம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் நீங்கும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். நண்பர்கள் மத்தியில் நல்ல மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். புதுமண தம்பதிகள் நல்ல செய்திகளைப் பெறலாம். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். புதிய நபர்களால் நன்மை உண்டு. ஆன்மீக பெரியோரின் ஆசி கிட்டும். உடன்பிறப்புகளால் நன்மை உண்டு. வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உறவினர்களிடையே சின்ன மன கசப்புக்கள் வந்து நீங்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவது அவசியம். பழைய வீட்டை சீரமைக்க வேண்டியிருக்கும். திட்டமிட்ட காரியத்தை தாமதின்றி முடிக்க முடியும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உத்யோகம் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
சந்திராஷ்டமம் : 14,15,16 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் பல திருப்புமுனைகள் நிறைந்து இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். புதிய மாற்றங்களைக் காணக்கூடும். மாத தொடக்கம் சற்று மெதுவாக இருந்தாலும், போக போக ஆற்றலும், உற்சாகமும் அதிகரிக்கும். ஆன்மீக சுற்றுலா செல்லும் எண்ணம் இருக்கும். நிதி நிலைமை வலுவடையும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை குடும்ப மருத்துவரிடம் சென்று உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. சொந்த பந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்கள் பிடிவாத குணத்தை ஒதுக்கி வைப்பது எல்லா வகையிலும் நல்லது. குடும்பத்தில் தொலைத்து போன சந்தோஷம் மீண்டும் வரும். மன தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் அனுசரித்து போகவும். உறவினர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் விட்டுக்கொடுத்து போவது நன்மை தரும். குடும்பத்தில் சிறு பிரச்னைகள் வந்தாலும் மகிழ்ச்சி இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகள் பக்கபலமாக. புது வாகனம் வாங்குவதில் உள்ள தடைகள் அகலும். வாகன பயணங்களில் கவனம் தேவை. தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். வராமல் நின்று போன பணம் கைக்கு வரும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்படலாம். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உங்களை சுற்றி நிறைய விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில், வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். கூட்டு தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 16,17,18 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் இழுபறியில் இருந்த பல காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். புதிய முயற்சிகள் பலிதமாகும். வருமானமும், செலவுகளும் நிலையாக இருக்கும். அதாவது வந்த வேகத்தில் பணம் செலவாகும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். இதன் மூலம் நிறைய செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மறைமுக எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்கவும். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். குடும்பத்திற்குள் மனக்கசப்புகள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஒரு சில முக்கிய விஷயங்களை நேரடியாக சென்று முடிப்பது நல்லது. வீடு, மனை சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வு இருக்கும். குடும்பத்தில் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். நண்பர்களிடம் மனக்குறைகளை சொல்ல முடியும். விஐபிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதரவும் கிடைக்கும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். வேண்டிவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர இயலும். சொந்த பந்தங்களின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை தரும். கணவன் மனைவிக்கிடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். உங்கள் சாதுரியமான பேச்சால் நினைத்த காரியத்தை சாதிக்க முடியும். குடும்ப விவகாரங்களில் அடுத்தவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் அதை மன உறுதியடன் போராடி வெற்றி பெற முடியும். உத்யோகத்தில் பணிகளை கவனமாக மேற்கொள்ளவும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும். சந்திராஷ்டமம் : 18,19,20 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் வாழ்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வழி கிடைக்கும். புதிய வருமான வழிகளை கண்டறிய முடியும். தனிப்பட்ட வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமை வலுவடையும். குடும்பத்தில் தன வரவுக்கு வாய்ப்புண்டு. திட்டமிட்ட பயணங்களை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தை பற்றிய கவலை அதிகம் இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மனக்குறைகளை மற்றவர்களிடம் சொல்வதால் மன பாரம் குறையும். பணம் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. உற்றார், உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவர். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். மனதில் இருந்த குழப்பநிலை மாறி மனதில் ஒரு தெளிவு ஏற்படும். உடன்பிறப்புகளின் நலனில் அக்கறைகொள்ளவும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். நண்பர்கள் சிலர் விரோதமாக செயல்பட வாய்ப்புண்டு. எதிர்பாப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். புதிய முயற்சிகளை சிறிது காலம் தள்ளி வைக்கவும். பெற்றோர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வாகனம் வாங்கும் முயற்சிகள் தடைப்படும். கடன் தொந்தரவு பெரியளவில் இருக்காது. எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த காரியங்கள் காலதாமதின்றி சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.
சந்திராஷ்டமம் : 20,21,22,23 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லாம் சாதகமாக அமையும். வீடு தேடி நல்ல வாய்ப்புகள் வரும். மனம் மகிழும் செய்தி ஒன்று வரும். புது வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் வரும். குடும்ப வாழ்வில் நேர்மறையான மாற்றங்களைக் காண முடியும். இம்மாதத்தில் கோபத்தையும், பிடிவாதத்தையும் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் அது உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும். தியானத்தால் மனம் அமைதி பெரும். குடும்பத்தில் பிரச்சனைகள் நாளடைவில் சீராகும். விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும். எத்தனை தடைவந்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெற முடியும். வீடு, வாகன சேர்க்கை ஏற்படும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலனை பெற முடியும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. எதிர்த்து நின்றவர்கள் நண்பர்களாக மாறுவர். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். மனதில் உள்ள குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். குடும்பத்தில் சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்கவும். வாகன பயணங்களில் கவனம் தேவை. வரும் எதிர்ப்புகளை சமாளிக்கும் பக்குவம் இருக்கும். உத்யோகம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சில தடைகளை சந்தித்தாலும், மாத இறுதியில் நிலைமை மேம்படும்.
சந்திராஷ்டமம் : 23,24,25 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளும் நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும். உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த முடியும். திறமைகள் மேம்படும். மன கவலை நீடித்தாலும், தன்னம்பிக்கையால் அனைத்தையும் திறம்பட சமாளிப்பீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உங்களை சுற்றி இருந்த எதிர்ப்புகள் முழுமையாக நீங்கும். குடும்ப பிரச்சனைகள் தலைதூக்கும். புத்தி சாதூர்யத்தால் எந்த ஒரு தடைகள் வந்தாலும் அதை சமாளிக்க முடியும். குடும்பத்தில் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. யாரையும் முழுமையாக நம்ப வேண்டும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் முடிவுகளை கலந்தாலோசித்து எடுப்பது நன்மை தரும். உடன்பிறப்புகளால் சில பண விரையம் ஏற்படும். புது முயற்சிகளில் ஒரு சில தடைகள் வரலாம். நட்பு வழியில் நல்ல தகவல் வரும். உற்றார், உறவினர்களால் சில பண நெருக்கடிகள் வர வாய்ப்புண்டு. உடல் நலம் சீராகும். குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் சந்தர்ப்பங்கள் வரும். மனதில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் கூடும். கணவன் மனைவிக்கிடையே ஈகோ பிரச்சனையை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். புது வீடு, மனை வாங்குவதில் ஆர்வம் கூடும். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதை துணிச்சலுடன் எதிர்கொள்ள முடியும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்யோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 25,26,27 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் யோகமான மாதமாக அமையும், தலையெழுத்தை மாற்றும் முக்கிய மாற்றங்கள் நிகழலாம். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும், சேமிக்கவும் முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உஷ்ணம் தொடர்பான தொந்தரவுகள் வர வாய்ப்புண்டு. பெற்றோரின் வழிகாட்டுதலும் கிடைக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் ஏற்பட்ட கசப்பான விஷயங்கள் மறையும். மேலும் உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல் ஒருவர் அறிமுகமாவார். சற்றும் எதிர்பார்க்காத செலவுகள் அதிகம் வரும். உடல் உபாதைகள் நீங்கும். புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் சிலர் உதவியை கேட்டு வருவர். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். முக்கிய பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். பணவரவு சிறிது தாமதத்திற்கு பின் கைக்கு வரும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். புதிதாக அறிமுகமானவர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து போகவும். கணவன் மனைவிக்குள் சுமுகமான சூழல் நிலவும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வெளியில் கடன் வாங்கி செலவு வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். பொதுப் பிரச்சனைகளை எதிர்கொள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 27,28,29,30 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.