| தமிழ் நாட்காட்டி மே 2026 | |
|---|---|
| அமாவாசை | 18-மே-2026 திங்கட்கிழமை |
| பௌர்ணமி | 01-மே-2026 வெள்ளிக்கிழமை 31-மே-2026 ஞாயிறு |
| கார்த்திகை | 16-மே-2026 சனிக்கிழமை |
| சஷ்டி விரதம் | 22-மே-2026 வெள்ளிக்கிழமை |
| சங்கடஹர சதுர்த்தி | 05-மே-2026 செவ்வாய்கிழமை |
| சதுர்த்தி | 20-மே-2026 புதன்கிழமை |
| பிரதோஷம் | 14-மே-2026 வியாழன் 28-மே-2026 வியாழன் |
| திருவோணம் | 09-மே-2026 சனிக்கிழமை |
| மாத சிவராத்திரி | 15-மே-2026 வெள்ளிக்கிழமை |
| ஏகாதசி | 13-மே-2026 புதன்கிழமை 27-மே-2026 புதன்கிழமை |
| அஷ்டமி | 09-மே-2026 சனிக்கிழமை 23-மே-2026 சனிக்கிழமை |
| நவமி | 10-மே-2026 ஞாயிறு 24-மே-2026 ஞாயிறு |
| அரசு விடுமுறை நாட்கள் | 01-மே-2026 வெள்ளிக்கிழமை மே தினம் 28-மே-2026 வியாழன் பக்ரீத் பண்டிகை |
| திருமண நாட்கள் | 08-மே-2026 வெள்ளிக்கிழமை தேய்பிறை 13-மே-2026 புதன்கிழமை தேய்பிறை 14-மே-2026 வியாழன் தேய்பிறை 18-மே-2026 திங்கட்கிழமை வளர்பிறை 28-மே-2026 வியாழன் வளர்பிறை 29-மே-2026 வெள்ளிக்கிழமை வளர்பிறை |
| திருவிழாக்கள் | 01-மே-2026 வெள்ளிக்கிழமை கள்ளழகர் வைகை எழுந்தருளல் 04-மே-2026 திங்கட்கிழமை அக்னி நட்சத்திரம் துவக்கம் 28-மே-2026 வியாழன் அக்னி நட்சத்திரம் முடிவு 28-மே-2026 வியாழன் பக்ரீத் பண்டிகை 30-மே-2026 சனிக்கிழமை வைகாசி விசாகம் |
இன்றைய ராசி பலன் 25 மே 2026 திங்கட்கிழமை
மேஷ ராசி அன்பர்களே,
மேஷ ராசி நேயர்களே, எந்த ஒரு காரியத்திலும் அலட்சியம் வேண்டாம். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
ரிஷப ராசி நேயர்களே,
ரிஷப ராசி நேயர்களே, பல நல்ல சந்தர்ப்பங்களும், புதிய வாய்ப்புகளும் உருவாகும். பிரபலங்களின் சிநேகிதம் கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மிதுன ராசி அன்பர்களே,
மிதுன ராசி நேயர்களே, குடும்பத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். அனாவசிய செலவுகளை குறைக்கவும். வாகன போக்குவரத்தில் கவனமாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
கடக ராசி நேயர்களே,
கடக ராசி நேயர்களே, செய்வதை விரும்பிச் செய்தால் வெற்றி நிச்சயம். பயணத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் சிறக்கும்.
சிம்ம ராசி நேயர்களே,
சிம்ம ராசி நேயர்களே, மனதில் புது சிந்தனைகள் உதிக்கும். முக்கிய வேலைகளை யாரிடத்திலும் ஒப்படைக்க வேண்டாம். கடன் நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கன்னி ராசி நேயர்களே,
கன்னி ராசி நேயர்களே, அனுபவ அறிவை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் வரும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
துலாம் ராசி நேயர்களே,
துலாம் ராசி நேயர்களே, குடும்ப தேவைகள் ஒவ்வொன்றாக பூர்த்தியாகும். புது நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே,
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் சாதகமான விஷயங்கள் நடக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். எடுத்த வேலையை கச்சிதமாக முடிக்க முடியும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
தனுசு ராசி நேயர்களே,
தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் கிடைக்கும். புது சொந்தங்களால் சில நெருக்கடிகள் வரும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
மகர ராசி நேயர்களே,
மகர ராசி நேயர்களே, எதிலும் முன்யோசனைவுடன் செயல்படுவது நல்லது. பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். உடல் உபாதைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
கும்ப ராசி நேயர்களே,
கும்ப ராசி நேயர்களே, குடும்ப பிரச்னையை சமாளிக்க முடியும். பண வரவு இருக்கும். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
மீன ராசி நேயர்களே,
மீன ராசி நேயர்களே, தெய்வீக காரியங்களில் நாட்டம் வரும். நட்பு வழியில் நல்லது நடக்கும். வரும் எதிர்ப்புகளை சமாளிக்கும் சாமர்த்தியம் இருக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
தமிழ் ராசி பலன் வாரந்தோறும் 25-05-2026 To 31-05-2026

மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, வாக்கு வன்மையால் எதையும் சாதிக் முடியும். குடும்பத்தை பற்றிய உயர்வான எண்ணம் இருக்கும். திட்டமிடாத செலவுகளை சமாளிக்க வேண்டிவரும். தெய்வ பக்தி அதிகரிக்கும். முக்கிய தருணங்களில் முடிவு எடுப்பதில் சிரம பட வேண்டாம். சோம்பேறித்தனத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. புதிய வீடு வாங்குவது, கட்டுவது தொடர்பான யோசனைகள் வரும். குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். வாங்கிய கடனை திருப்பி கடன் கொடுப்பதுடன் மற்றும் பிறரிடம் உதவி கேட்காத நிலை ஏற்படும். உடன்பிறப்பு வகையில் நன்மை ஏற்படும். கணவன் மனைவிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பயணங்களின் போது உங்கள் உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
பரிகாரம் : முருகரை விரதமிருந்து வழிபடவும்.

ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடைபெறும். மனதில் புதுமையான எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற முடியும். எதிர்பாரா மருத்துவ செலவுகள் வரும். குடும்ப விஷயங்களை யாரிடமும் பேசாமல் இருப்பது நல்லது. நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். புது நண்பர்களுடன் பழகும்போது சற்று ஜாக்கிரதையாக இருக்கவும், ஏன் எனில் அவர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புண்டு. கணவன் மனைவிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். உங்கள் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவர். வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனமும், பேசும் வார்த்தையில் நிதானமும் தேவை. உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
பரிகாரம் : குலதெய்வ வழிபாடு செய்யவும்.

மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப பெருமையை வெகுவாக உயர்த்த முடியும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. பழைய நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் நன்மைகளும் ஏற்படும். பிரியமானவர்கள் வழியில் சில பண விரையம் ஏற்படும். உங்களை சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். உங்கள் விருப்பத்துக்கு மாறாக சில காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குடும்பத்தை பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை முற்றிலும் நீங்கிவிடும். சொந்த பந்தங்களின் முழுமையான ஆதரவை பெற முடியும். உத்யோகம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : மஹாவிஷ்னுவை வணங்கி வழிபடவும்.

கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பொருளாதார நிலை சீராக முன்னேற்றம் அடையும். முக்கிய காரணங்களுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும், இதனால் உடல் அசதியும் மன சோர்வும் ஏற்படும். எதிலும் சாதகமான சூழல் நிலவும். நீங்கள் கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும், அவர்களால் பெரியளவில் நன்மையும் கிடைக்கும். பழைய கடன்களை அடைக்கும் முயற்சி கைகூடும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு மறையும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். பொது பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. உத்யோகத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்

சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, குடும்பத்தில் முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். பண சேமிப்பில் கவனம் செலுத்தவும். உடல் ஆரோக்கியம் சிறப்பான முறையில் இருக்கும். தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும். உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. குடும்ப வருமானம் சொல்லும்படி இருக்கும். பெண்கள் விஷயத்தில் சற்று கவனம் தேவை. உணவு விஷயங்களில் கட்டுப்பாடு மிகவும் அவசியம். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்

கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் அலட்சியப்போக்கு வேண்டாம், கவனம் தேவை. குடும்ப மருத்துவரிடம் உடலை பரிசோதித்து கொள்வது நல்லது. நீங்கள் திட்டமிட்ட காரியம் ஒன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். தேவையற்ற மனசஞ்சலம் உண்டாகலாம். கணவன் மனைவிடையே பணி போர் ஏற்பட்டு பின் சீராகும். கடன் தொல்லை குறைய ஆரம்பிக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றினாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. யாரிடத்திலும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
பரிகாரம் : ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றவும்

துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்பு ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்யவும். கடுமையான முயற்சியால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் இருக்கும். தெய்வ பிராத்தனைகள் நிறைவேறும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. மறைமுக எதிரிகளின் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். குடும்பத்தில் சாதகமான சூழ்நிலை உருவாகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்.

விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புதிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பேசும் வார்த்தைகளில் பொறுமை அவசியம். பண வரவுக்கு எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் பெரிய செலவுகள் ஏதும் வர வாய்ப்பில்லை. சிறிய செலவுகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். உங்கள் திட்டங்களை பற்றி வெளியில் விவாதிப்பதை தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். திருமணம் காரியம் விரைவில் கைகூடும். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகை மாறும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சில நேரங்களில் எதை செய்வது எதை விடுவது என்ற தடுமாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.
பரிகாரம் : சாஸ்தாவை வணங்கி வழிபடவும்.

தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மன நிம்மதி ஏற்படும். குடும்ப பொருளாதார நிலை உயரும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். இஷ்ட தெய்வ வழிபாடு மனநிம்மதியை தரும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். பிரியமானவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ளவும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் கைகூடும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். எதிரிகளின் இன்னல்கள் குறைந்து ஏற்றமான நிலை உண்டாகும். வாகன பயணங்களிலும் இரவு நேர பயணங்களிலும் கவனமாக இருக்கவும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
பரிகாரம் : விநாயகரை அருகம்புல் வைத்து வழிபடவும்

மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். மனதில் தெளிவு நிலை உண்டாகும். விலகி நின்றவர்கள் கூட விரும்பி வந்து இணைவர். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் கூட ஆரம்பிக்கும். சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். முன்பு தடைப்பட்ட காரியம் இப்போது இனிதே நடைபெறும். எதிர்பாலினத்தவருடன் பழகும்போது கவனம் தேவை. மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். உத்யோகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்

கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப நபர்களின் ஆலோசனை முக்கிய சமயத்தில் கிடைக்கும். பண வரவு நன்றாக இருக்கும். மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம். செலவுகள் பற்றி பெரியதாக கவலைப்பட வேண்டியதில்லை. திட்டமிட்ட காரியங்களை உடனுக்குடன் செய்து முடிக்க முடியும். குடும்ப விவகாரங்களில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். பழைய கடன்களை அடைத்துவிடவும் வாய்ப்புண்டு. கணவன் மனைவி மனம் விட்டு பேசுவது நன்மை தரும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வேலைகள் கூட சீக்கிரத்தில் முடியும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். விஐபிகளின் தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
பரிகாரம் : சீரடி சாய் பாபாவை வழிபடவும்

மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும். மனதில் புது தெம்பும், உற்சாகமும் தோன்றும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நற்செய்தி வந்து சேரும். உடல் நிலை மேம்படும். மற்றவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பான முறையில் செய்ய முடியும். தொடர் அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. கணவன் மனைவியிடையே சண்டை, சச்சரவுகளை தவிர்க்கவும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். திடீர் பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : நவக்கிரகத்தை தினமும் வழிபடவும்.
மே மாத ராசி பலன்கள் 2026
| மே மாத ராசி பலன்கள் 2026 |
| மே மாத பலன்கள் – (2026 ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 18 முதல் வைகாசி மாதம் 17ம் தேதி வரை. வாக்கிய பஞ்சாங்கப்படி (01-05-2026 முதல் 31-05-2026) வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ,அந்தரம், கோச்சாரம் இவைகள் அனைத்தும் சாதகமாக இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே என்னுடைய அனுபவ பூர்வ உண்மை. கிரக நிலை மாற்றம் : 01.05.2026 – மேஷ புதன் 11.05.2026 – மேஷ செவ்வாய் 14.05.2026- மிதுன சுக்கிரன் 15.05.2026 – ரிஷபம் சூரியன் 26.05.2026 – கடக குரு ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஜோதிடர் ஆலந்தூர் A.வினோத் குமார், PH.D Astrology (அலைபேசி: 09003019831) |
மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த மாத தொடக்கம் ஆற்றலும், நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், முன் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மனதில் இருந்த பயம் நீங்கி தெளிவு பிறக்கும். புதிதாக ஏதாவது செய்ய ஆவல் எழும். பழைய பிரச்சனைகள் தீரும். ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் கூடும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். மனம் மகிழும்படியான விஷயங்கள் நடக்கும். நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்க தாமதமாகும். குடும்பத்தில் வெளி நபர்களால் இருந்த குழப்பம் நீங்கும். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத தடைகளும், பிரச்னைகளும் வந்தாலும் உடல் நிலையில் கவனம் தேவை. மனதிற்குள் சிறு சிறு சங்கடங்கள் வந்தாலும் அதை பெரிதுபடுத்த வேண்டாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கவலைகள் அகலும். குடும்ப விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். பண வரவு சுமாராக இருக்கும். கடன் நெருக்கடிகள் ஓரளவு குறையும். கொடுத்த வாக்கை தவறாமல் காப்பாற்ற முடியும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக்வருத்தங்கள் நீங்கும். எதிரிகளால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனம், போன்றவற்றால் அதிக செலவுகள் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 3,4,5 & 30 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் மங்களகரமானதாக இருக்கும். உங்கள் காரிய வெற்றிக்கு தேவையான அனைத்து உதவியும் கிடைக்கும். நிலுவையில் உள்ள பல வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். உங்களின் கடமைகளை திறம்பட செய்ய முடிக்க முடியும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். எந்த ஒரு காரியம் செய்யும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். குடும்பத்தில் முக்கிய விஷயங்களை திட்டமிட்டு செய்வது நல்லது. தீர்க்க முடியாத பிரச்னைகளை எளிதில் கூட எளிதில் தீர்க்க முடியும். போராட்டங்கள் பாராட்டுகளாக மாறும். சவாலான சூழலைச் சாதகமாக மாற்றும் மாதம். அடுத்தவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். குடும்ப விஷயங்களில் சிறு, சிறு பிரச்னைகள் இருந்தாலும் அது நாளடைவில் சரியாகும். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. குல தெய்வ வழிபாடுகளை தவறாமல் மேற்கொள்ளவும். குடும்பத்தில் உள்ளவர்களால் சந்தோஷம் ஏற்படும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது. உடன்பிறப்புகளிடம் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். பண நெருக்கடி ஓரளவு குறையும். பூர்வீக சொத்து விஷயங்களில் பிரச்னைகள் வந்து நீங்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் குறையும்.
சந்திராஷ்டமம் : 5,6,7,8 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். உடல் சோர்வால் சிரமப்படக்கூடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் புது விஷயங்களை செயல்படுத்தும் எண்ணம் வரும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். எடுக்கும் முயற்சிகளில் தடை இருந்தாலும் மன உறுதியுடன் செயல்பட்டு வெற்றி பெற முடியும். புத்திசாதூரியம் மூலம் நிறைய சாதிக்க முடியும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் பாராட்டு கிடைக்கும். உடல் சோர்வு, அசதி நீங்கும். வீடு, மனை வாங்குவதில் சிறிய தடை இருக்கும். பெற்றோர்களின் ஆலோசனை கிடைக்கும். புது கடன் வாங்கி அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உடல் நிலையில் கவனம் தேவை. வாகன பராமரிப்பு செலவுகள் வந்து நீங்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். உடன்பிறப்புகளின் ஆதரவு பெருகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். பெண்களால் சில தொந்தரவுகள் வரும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் ஏற்படும். திட்டமிட்ட பயணங்களை தவிர்க்கவும். வாகனம் வாங்குவதை சற்று தள்ளி வைக்கவும். புதிய முடிவுகளையும், புதிய முயற்சிகளையும் தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : 8,9,10 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் சிறப்பான ஒரு மாதமாக இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். நீண்ட கால பிரச்சனைகள் குறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். நிதி நிலைமை சீராக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். வீட்டு தேவைகளுக்கு கூடுதலாக செய்ய வேண்டிவரும். முக்கிய காரியங்களில் இருந்த தடை நீங்கும். எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அதை திறமையாக சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு, சிறு தடைகள் வந்தாலும் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உடன்பிறப்புகளிடம் சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் உங்களிடம் அடிபணிந்து போவர். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். நீண்ட நாள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். மற்றவர்கள் உங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லையே என ஆதங்கம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். உறவினர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து உயரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் பல தடங்கலுக்கு பின் முன்னேற்றம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 10,11,12 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் இருந்து வந்த சஞ்சலம் நீங்கி மன மகிழ்ச்சியும், நிம்மதியும் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தன்னம்பிக்கை வலுவடையும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைத்தாலும், செலவுகளையும் அதிகம் சந்திக்க நேரிடும். குடும்ப நலனுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவை எடுக்க அடுத்தவரின் ஆலோசனையை கேட்பது நல்லது. பொருளாதார சிக்கல் இருந்தாலும் அதை எதிர்கொள்ள முடியும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். எடுக்கும் முயற்சிகளில் சிறு, சிறு தடை பிரச்னைகள் வந்தாலும், தொடர்ந்து முயற்சி செய்யவும். உடன் பிறப்புக்கள் உதவிகரமாக இருப்பர். உறவினர்களால் சின்ன சின்ன மனக்கஷ்டங்கள் வந்து போகும். தெய்வ அனுகூலம் உண்டு. உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகள் விலகிச் செல்வர். நாள் பட்ட பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே பனிப்போர் ஏற்படும். வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். பிரபலங்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். புது நண்பர்களால் ஆதாயம் இருக்கும். மற்றவர்களிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். கடனாக கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். உங்களுக்கு எதிராக வரும் எதிர்ப்புகள் முற்றிலும் நீங்கும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். வேலையில் வெற்றியையும் காண முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
சந்திராஷ்டமம் : 12,13,14 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் நிதி நிலை வழக்கத்தை விட நன்றாகவே இருக்கும். பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். மனதில் புது உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். புது முதலீடுகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். இம்மாதத்தில் ஒரு சிலர் உங்களுக்கு எதிராக செயல்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிரியமானவர்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொள்வதால் மனக்குறைகள் நீங்கும். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செலவுகள் அதிகம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் நீங்கும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். நண்பர்கள் மத்தியில் நல்ல மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். புதுமண தம்பதிகள் நல்ல செய்திகளைப் பெறலாம். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். புதிய நபர்களால் நன்மை உண்டு. ஆன்மீக பெரியோரின் ஆசி கிட்டும். உடன்பிறப்புகளால் நன்மை உண்டு. வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உறவினர்களிடையே சின்ன மன கசப்புக்கள் வந்து நீங்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவது அவசியம். பழைய வீட்டை சீரமைக்க வேண்டியிருக்கும். திட்டமிட்ட காரியத்தை தாமதின்றி முடிக்க முடியும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உத்யோகம் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
சந்திராஷ்டமம் : 14,15,16 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் பல திருப்புமுனைகள் நிறைந்து இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். புதிய மாற்றங்களைக் காணக்கூடும். மாத தொடக்கம் சற்று மெதுவாக இருந்தாலும், போக போக ஆற்றலும், உற்சாகமும் அதிகரிக்கும். ஆன்மீக சுற்றுலா செல்லும் எண்ணம் இருக்கும். நிதி நிலைமை வலுவடையும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை குடும்ப மருத்துவரிடம் சென்று உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. சொந்த பந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்கள் பிடிவாத குணத்தை ஒதுக்கி வைப்பது எல்லா வகையிலும் நல்லது. குடும்பத்தில் தொலைத்து போன சந்தோஷம் மீண்டும் வரும். மன தைரியம் அதிகரிக்கும். குடும்பத்தில் அனுசரித்து போகவும். உறவினர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் விட்டுக்கொடுத்து போவது நன்மை தரும். குடும்பத்தில் சிறு பிரச்னைகள் வந்தாலும் மகிழ்ச்சி இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்புகள் பக்கபலமாக. புது வாகனம் வாங்குவதில் உள்ள தடைகள் அகலும். வாகன பயணங்களில் கவனம் தேவை. தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். வராமல் நின்று போன பணம் கைக்கு வரும். உடல் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்படலாம். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உங்களை சுற்றி நிறைய விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில், வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். கூட்டு தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 16,17,18 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் இழுபறியில் இருந்த பல காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். புதிய முயற்சிகள் பலிதமாகும். வருமானமும், செலவுகளும் நிலையாக இருக்கும். அதாவது வந்த வேகத்தில் பணம் செலவாகும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். இதன் மூலம் நிறைய செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். மறைமுக எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்கவும். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். குடும்பத்திற்குள் மனக்கசப்புகள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஒரு சில முக்கிய விஷயங்களை நேரடியாக சென்று முடிப்பது நல்லது. வீடு, மனை சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வு இருக்கும். குடும்பத்தில் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். நண்பர்களிடம் மனக்குறைகளை சொல்ல முடியும். விஐபிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதரவும் கிடைக்கும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். வேண்டிவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர இயலும். சொந்த பந்தங்களின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை தரும். கணவன் மனைவிக்கிடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். உங்கள் சாதுரியமான பேச்சால் நினைத்த காரியத்தை சாதிக்க முடியும். குடும்ப விவகாரங்களில் அடுத்தவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் அதை மன உறுதியடன் போராடி வெற்றி பெற முடியும். உத்யோகத்தில் பணிகளை கவனமாக மேற்கொள்ளவும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும். சந்திராஷ்டமம் : 18,19,20 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் வாழ்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வழி கிடைக்கும். புதிய வருமான வழிகளை கண்டறிய முடியும். தனிப்பட்ட வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமை வலுவடையும். குடும்பத்தில் தன வரவுக்கு வாய்ப்புண்டு. திட்டமிட்ட பயணங்களை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தை பற்றிய கவலை அதிகம் இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மனக்குறைகளை மற்றவர்களிடம் சொல்வதால் மன பாரம் குறையும். பணம் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. உற்றார், உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவர். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். மனதில் இருந்த குழப்பநிலை மாறி மனதில் ஒரு தெளிவு ஏற்படும். உடன்பிறப்புகளின் நலனில் அக்கறைகொள்ளவும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். நண்பர்கள் சிலர் விரோதமாக செயல்பட வாய்ப்புண்டு. எதிர்பாப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். புதிய முயற்சிகளை சிறிது காலம் தள்ளி வைக்கவும். பெற்றோர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வாகனம் வாங்கும் முயற்சிகள் தடைப்படும். கடன் தொந்தரவு பெரியளவில் இருக்காது. எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த காரியங்கள் காலதாமதின்றி சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.
சந்திராஷ்டமம் : 20,21,22,23 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லாம் சாதகமாக அமையும். வீடு தேடி நல்ல வாய்ப்புகள் வரும். மனம் மகிழும் செய்தி ஒன்று வரும். புது வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் வரும். குடும்ப வாழ்வில் நேர்மறையான மாற்றங்களைக் காண முடியும். இம்மாதத்தில் கோபத்தையும், பிடிவாதத்தையும் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் அது உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும். தியானத்தால் மனம் அமைதி பெரும். குடும்பத்தில் பிரச்சனைகள் நாளடைவில் சீராகும். விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும். எத்தனை தடைவந்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெற முடியும். வீடு, வாகன சேர்க்கை ஏற்படும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலனை பெற முடியும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம். குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. எதிர்த்து நின்றவர்கள் நண்பர்களாக மாறுவர். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். மனதில் உள்ள குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். குடும்பத்தில் சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்கவும். வாகன பயணங்களில் கவனம் தேவை. வரும் எதிர்ப்புகளை சமாளிக்கும் பக்குவம் இருக்கும். உத்யோகம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சில தடைகளை சந்தித்தாலும், மாத இறுதியில் நிலைமை மேம்படும்.
சந்திராஷ்டமம் : 23,24,25 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளும் நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும். உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த முடியும். திறமைகள் மேம்படும். மன கவலை நீடித்தாலும், தன்னம்பிக்கையால் அனைத்தையும் திறம்பட சமாளிப்பீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உங்களை சுற்றி இருந்த எதிர்ப்புகள் முழுமையாக நீங்கும். குடும்ப பிரச்சனைகள் தலைதூக்கும். புத்தி சாதூர்யத்தால் எந்த ஒரு தடைகள் வந்தாலும் அதை சமாளிக்க முடியும். குடும்பத்தில் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. யாரையும் முழுமையாக நம்ப வேண்டும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் முடிவுகளை கலந்தாலோசித்து எடுப்பது நன்மை தரும். உடன்பிறப்புகளால் சில பண விரையம் ஏற்படும். புது முயற்சிகளில் ஒரு சில தடைகள் வரலாம். நட்பு வழியில் நல்ல தகவல் வரும். உற்றார், உறவினர்களால் சில பண நெருக்கடிகள் வர வாய்ப்புண்டு. உடல் நலம் சீராகும். குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் சந்தர்ப்பங்கள் வரும். மனதில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் கூடும். கணவன் மனைவிக்கிடையே ஈகோ பிரச்சனையை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். புது வீடு, மனை வாங்குவதில் ஆர்வம் கூடும். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதை துணிச்சலுடன் எதிர்கொள்ள முடியும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்யோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : 25,26,27 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் யோகமான மாதமாக அமையும், தலையெழுத்தை மாற்றும் முக்கிய மாற்றங்கள் நிகழலாம். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும், சேமிக்கவும் முடியும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உஷ்ணம் தொடர்பான தொந்தரவுகள் வர வாய்ப்புண்டு. பெற்றோரின் வழிகாட்டுதலும் கிடைக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் ஏற்பட்ட கசப்பான விஷயங்கள் மறையும். மேலும் உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல் ஒருவர் அறிமுகமாவார். சற்றும் எதிர்பார்க்காத செலவுகள் அதிகம் வரும். உடல் உபாதைகள் நீங்கும். புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் சிலர் உதவியை கேட்டு வருவர். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். முக்கிய பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். பணவரவு சிறிது தாமதத்திற்கு பின் கைக்கு வரும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். புதிதாக அறிமுகமானவர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து போகவும். கணவன் மனைவிக்குள் சுமுகமான சூழல் நிலவும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வெளியில் கடன் வாங்கி செலவு வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். பொதுப் பிரச்சனைகளை எதிர்கொள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 27,28,29,30 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.