| தமிழ் நாட்காட்டி ஜூன் 2026 | |
|---|---|
| அமாவாசை | 14-ஜூன்-2026 ஞாயிறு |
| பௌர்ணமி | 29-ஜூன்-2026 திங்கட்கிழமை |
| கார்த்திகை | 13-ஜூன்-2026 சனிக்கிழமை |
| சஷ்டி விரதம் | 20-ஜூன்-2026 சனிக்கிழமை |
| சங்கடஹர சதுர்த்தி | 04-ஜூன்-2026 வியாழன் |
| சதுர்த்தி | 18-ஜூன்-2026 வியாழன் |
| பிரதோஷம் | 12-ஜூன்-2026 வெள்ளிக்கிழமை 27-ஜூன்-2026 சனிக்கிழமை |
| திருவோணம் | 05-ஜூன்-2026 வெள்ளிக்கிழமை |
| மாத சிவராத்திரி | 13-ஜூன்-2026 சனிக்கிழமை |
| ஏகாதசி | 11-ஜூன்-2026 வியாழன் 25-ஜூன்-2026 வியாழன் |
| அஷ்டமி | 08-ஜூன்-2026 திங்கட்கிழமை 22-ஜூன்-2026 திங்கட்கிழமை |
| நவமி | 09-ஜூன்-2026 செவ்வாய்கிழமை 23-ஜூன்-2026 செவ்வாய் |
| அரசு விடுமுறை நாட்கள் | 26-ஜூன்-2026 வெள்ளிக்கிழமை மொஹரம் பண்டிகை |
| திருமண நாட்கள் | 04-ஜூன்-2026 வியாழன் தேய்பிறை 07-ஜூன்-2026 ஞாயிறு தேய்பிறை 17-ஜூன்-2026 புதன்கிழமை வளர்பிறை 18-ஜூன்-2026 வியாழன் வளர்பிறை 24-ஜூன்-2026 புதன்கிழமை வளர்பிறை 25-ஜூன்-2026 வியாழன் வளர்பிறை |
| திருவிழாக்கள் | 22-ஜூன்-2026 திங்கட்கிழமை ஆனி உத்திர தரிசனம் 26-ஜூன்-2026 வெள்ளிக்கிழமை மொஹரம் |
இன்றைய ராசி பலன் 09 ஜூன் 2026 செவ்வாய்க்கிழமை
மேஷ ராசி :
பொருளாதார வளர்ச்சி இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முக்கிய காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
அதிர்ஷ்ட கிழமை : செவ்வாய் & ஞாயிறு
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான்
பரிகாரம் : செவ்வாய்க்கிழமை விரதங்களை மேற்கொள்வது நல்லது
நட்சத்திர பலன்கள்
அசுவினி : பண வரவுக்கான நாள்
பரணி : எதிலும் விட்டுக்கொடுத்து போகவும்
கிருத்திகை 1 : தடைகள் விலகும் நாள்
ரிஷப ராசி :
பல விதத்தில் சுகமும், சந்தோஷமும் கிடைக்கும். சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். பெரியோர்களின் அன்பை பெற முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
அதிர்ஷ்ட கிழமை : வெள்ளி & புதன்
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : மகாலட்சுமி
பரிகாரம் : குல தெய்வத்தை முறையாக வணங்கி வழிப்படவும்
நட்சத்திர பலன்கள்
கிருத்திகை 2,3,4 : மகிழ்ச்சி நிறைந்த நாள்
ரோகிணி : சேமிப்பில் கவனம் தேவை
மிருகசீரிடம் 1,2 : பெரியோர்கள் அன்பு பாராட்டுவர்
மிதுன ராசி :
எல்லோரிடமும் சகஜமாக பேசி பழகுவது நல்லது. சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உறவினர்களின் அன்பு மனதில் நெகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட கிழமை : புதன் & வெள்ளி.
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : அன்னை மீனாட்சி
பரிகாரம் : புதன் கிழமைகளில் பச்சை நிற ஆடைகள் பயன்படுத்துவது அதிர்ஷ்டத்தைத் தரும்.
நட்சத்திர பலன்கள்
மிருகசீரிடம் 3,4 : சகஜமாக இருக்க வேண்டிய நாள்
திருவாதிரை : சுறுசுறுப்புடன் இருக்க வேண்டிய நாள்
புனர்பூசம் 1,2,3 : உறவினர்கள் அன்பு பாராட்டுவர்
கடக ராசி :
மன உறுதியுடனும் செயல்பட்டால் காரியங்களில் வெற்றி நிச்சயம். புது பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். உத்யோகம் மாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட கிழமை : திங்கள் & வியாழன்.
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : சந்திரசேகரர் (சிவபெருமான்)
பரிகாரம் : பௌர்ணமி தினங்களில் ஏழைகளுக்கு அரிசி தானம் செய்வது துரதிர்ஷ்டங்களைப் போக்கும்.
நட்சத்திர பலன்கள்
புனர்பூசம் 4 : காரிய வெற்றி உண்டாகும் நாள்
பூசம் : பொருள் சேர்க்கை உண்டாகும் நாள்
ஆயில்யம் : பயணங்களில் கவனம் தேவை
சிம்ம ராசி :
வெளி நபர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். தேவையான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தவும். திருமணம் காரியம் கைகூடும். தொழில், வியபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : தங்க நிறம்
அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு & செவ்வாய்
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீ நரசிம்மர்
பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வணங்குவது அதிக நன்மையை தரும்.
நட்சத்திர பலன்கள்
மகம் : மன குழப்பம் நீங்கும் நாள்
பூரம் : முக்கிய வேலைகளில் கவனம் தேவை
உத்திரம் 1 : சுப காரியம் முடிவாகும்
கன்னி ராசி :
எடுத்த காரியத்தை முடிப்பதில் சில சிரமம் இருக்கும். வரவுக்கேற்ற, செலவுகளும் பின் தொடரும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வருவர். உத்யோக மாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
அதிர்ஷ்ட கிழமை: புதன் & வெள்ளி
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீமன் நாராயணன்
பரிகாரம் : பறவைகளுக்குத் தினமும் ஊறவைத்த பச்சைப் பயறு தானமாக வழங்கலாம்.
நட்சத்திர பலன்கள்
உத்திரம் 2,3,4 : சிரமங்கள் நிறைந்த நாள்
அஸ்தம் : வரவும், செலவும் சரி சமமாக இருக்கும்
சித்திரை1,2 : நண்பர்கள் நற்செய்தி கொண்டு வருவர்
துலாம் ராசி :
புதிய முயற்சிகள் நற்பலனை தரும். முன்கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மென்மையான பிங்க்
அதிர்ஷ்ட கிழமை: வெள்ளி & புதன்,
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : ஸ்ரீ ரங்கநாதர்
பரிகாரம் : ஏழைப் பெண்களுக்கு வெள்ளை நிற ஆடைகளை தானம் செய்வது நன்மை தரும்.
நட்சத்திர பலன்கள்
சித்திரை 3,4 : நற்பலன் கிடைக்கும் நாள்
ஸ்வாதி : நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்
விசாகம் 1,2,3 : சொந்தங்களின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிக ராசி: –
குடும்ப சிக்கல்கள் வெகுவாக குறையும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். திட்டமிட்ட வேலைகள் தடைகள் இல்லாமல் முடியும். உத்யோகத்தில் பணிச்சுமை இருக்கும்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு
அதிர்ஷ்ட கிழமை: செவ்வாய் & ஞாயிறு
அதிர்ஷ்டமான திசை : வடக்கு (அல்லது) கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : சண்முகர் (முருகன்)
பரிகாரம் : மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு, பசுவின் பால், தயிர், சர்க்கரை தானம் செய்வது நற்பலனைத் தரும்.
நட்சத்திர பலன்கள்
விசாகம் 4 : சிக்கல்கள் குறையும் நாள்
அனுஷம் : அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும்
கேட்டை : திட்டமிட்ட வேலைகள் முடிவடையும்
தனுசு ராசி:
மன வலிமை அதிகரிக்கும். பொழுதுபோக்கு, ஆடம்பரங்களுக்கு அதிக செலவழிக்க வேண்டாம். பெற்றோரின் ஆலோசனை கைகொடுக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
அதிர்ஷ்ட கிழமை: வியாழன் & செவ்வாய்
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி
பரிகாரம் : வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடவும்
நட்சத்திர பலன்கள்
மூலம் : மனவலிமை கூடும் நாள்
பூராடம் : ஆடம்பர செலவுகளை குறைக்கவும்
உத்திராடம் 1 : ஆலோசனை கிடைக்கும் நாள்
மகரம் ராசி:
சுயமரியாதையை விட்டு தர வேண்டாம். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொலைந்து போன பொருள் திரும்ப கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
அதிர்ஷ்ட கிழமை: சனி & வெள்ளி
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
வணங்க வேண்டிய தெய்வம் : காலபைரவர்
பரிகாரம் : நவகிரங்களை தினமும் 9 முறை வலம் வந்து வழிபடுவது சிறப்பு
நட்சத்திர பலன்கள்
உத்திராடம் 2,3,4 : சுய கௌரவம் அவசியமான ஒன்று
திருவோணம் : மதிப்பு உயரும் நாள்
அவிட்டம் 1,2 : தொலைந்தது திரும்ப கிடைக்கும்
கும்ப ராசி:
நீண்ட நாள் ஆசைகள் இறுதியாக நிறைவேறும். விஐபிகளின் தொடர்பால் நன்மைகள் உண்டு. கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும்.தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளி நிறம்
அதிர்ஷ்ட கிழமை: சனி & புதன்
அதிர்ஷ்டமான திசை திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : யோக கணபதி
பரிகாரம் : சனிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது வாழ்வில் ஏற்றத்தைத் தரும்.
நட்சத்திர பலன்கள்
அவிட்டம் 3,4 : ஆசைகள் நிறைவேறும் நாள்
சதயம் : பிரபலங்களால் ஆதாயம் உண்டு
பூரட்டாதி 1,2,3 : தம்பதியினருக்குள் அன்யோன்யம் ஏற்படும்
மீன ராசி :
குடும்பத்தில் யாவரையும் அனுசரித்து போகவும். தியானம் மன அழுத்தத்தைக் குறைக்கும். வேண்டபட்டவர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் புஷ்பராகம்
அதிர்ஷ்ட கிழமை: வியாழன்& திங்கள்
அதிர்ஷ்டமான திசை திசை : வடக்கு
வணங்க வேண்டிய தெய்வம் : தத்தாத்ரேயர்
பரிகாரம் : மகான்களின் ஜீவ சமாதிக்குச் சென்று வழிபாடு செய்வது சிறப்பு.
நட்சத்திர பலன்கள்
பூரட்டாதி 4 : அனுசரித்து போக வேண்டிய நாள்
உத்திரட்டாதி : மன அழுத்தம் குறையும் நாள்
ரேவதி: உதவி செய்ய வேண்டிய நாள்
தமிழ் ராசி பலன் வாரந்தோறும் 08-06-2026 To 14-06-2026

மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, நாள்பட்ட பிராத்தனைகள் நிறைவேறும். குடும்பத்துடன் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிவரும். உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு காரியத்திலும் அதிக அலைச்சலை சந்திக்க நேரிடும். குடும்பப் பெரியோர்கள் மீது நல்ல மரியாதை உண்டாகும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படுவீர்கள். வண்டி, வாகனங்கள் லாபத்தினைத் தரும். உடன்பிறப்பு வகையில் சுமூக உறவு ஏற்படும். புது வீட்டிற்கு மாற வேண்டிய சூழல் உருவாகும். கடன் பிரச்சனையை ஓரளவு குறையும். இது வரை தடைப்பட்டு வந்த காரியங்களை மீண்டும் தொடங்க முடியும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்கவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, குடும்ப பெருமையை உயர்த்த வழி கிடைக்கும். ஞாபக மறதித் தொல்லை அடிக்கடி ஏற்படும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். தொலைதூரப் பிரயாணம் செய்ய நேரிடலாம். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. நண்பர்கள் ஆலோசனைகள் தக்க சமயத்தில் உதவும். ஆன்மிக ரீதியான செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. கடன் பிரச்சனை படி படியாக குறைய தொடங்கும், மேற்கொண்டு கடன் வாங்கும் சூழல் இருக்காது. பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். உறவினர்களிடையே இருந்து வந்த மனகசப்பு நீங்கும். குடும்பத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் குறையும். மனதில் நினைத்த காரியம் எளிதில் நடக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் செழிப்படையும்.
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிப்படவும்

மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, மனதில் இருந்த எண்ணங்களும், திட்டங்களும் நல்ல முறையில் செயல்படும். சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியும். பொருளாதார நிலை சீரான உயர்வினைக் காணும். சேமிப்புகள் உயர்வடையும். குடும்பத்தில் சாதகமான சூழ்நிலைகள் உருவாக நிறைய வாய்ப்புள்ளது. அண்டை, அயலாருடன் கொண்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். குடும்பத்தில் பேராதரவை பெற முடியும். உடன்பிறப்புகளிடம் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உடல் உபாதைகள் நீங்கும். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியும். தேவையற்ற செலவுகள் ஏதும் செய்யாமல் பார்த்துக்கொள்ளவும். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு வரும். புது இடத்தில் உத்யோகம் அமையும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.
பரிகாரம்: வராகியை வணங்கி வழிபடவும்

கடக ராசி அன்பர்களே
கடக ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகளை ஏற்பட்டாலும், அதை எளிதாக சரி செய்து கொள்ள முடியும். மனதில் தோன்றும் நல்லெண்ணங்கள் உங்களது புகழை உயர்த்தும். உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். முன்பின் தெரியாத நபர்களுக்கு பொருளுதவி செய்வதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். வாழ்க்கைத்துணைவர் பக்கபலமாக இருந்து செயல்படுவர். தான, தர்ம காரியங்களுக்கு செலவழிக்க வேண்டியிருக்கும். நெருங்கிய உறவினர்களுடன் சுமுக உறவு காணப்படும். புதிய வீடு, நிலம் போன்றவற்றை வாங்கும் எண்ணம் மேலோங்கும். மற்றவர்களின் ஆலோசனைக்கு செவி சாய்பதை தவிர்க்கவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்.

சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் சற்றும் எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களுடன் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் அகலும். குடும்ப வேலைகளை தாமதமின்றி முடிக்க முடியும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் பொருள் சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உடல் நலம் சீரான நிலையில் இருக்கும். உற்றார், உறவினர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். குடும்பத்தில் வீண் செலவுகள் எதுவும் இல்லாமல் பார்த்து கொள்ளவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் பொறுமை அவசியம். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
பரிகாரம் : தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.

கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புதிய முயற்சிக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சலசலப்பான சூழல் நிலவும். பண விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. தொடர் அலைச்சலால் சில சமயம் உடல் நலம் பாதிக்கலாம். முன்கூட்டியே திட்டமிட்டு காரியத்தில் ஈடுபடுவதன் மூலம் ஒரு சில இழப்புகளை தவிர்க்க இயலும். நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். வெளியில் கடன் வாங்கி செலவு செய்வதை தவிர்க்கவும். எதிர்பார்த்த சில நல்ல விஷயங்கள் நடக்காமல் போகும். கணவன் மனைவிடையே விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற சண்டை சச்சரவுகளை தவிர்க்கலாம். குடும்பத்தினரின் நிறைவேற்ற முடியும். மனக்குழப்பங்கள் படிப்படியாக குறையும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
பரிகாரம் : ஸ்ரீ மகாலட்சுமியை வழிபடவும்.

துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்தால் சிக்கல் இல்லாமல் இருக்க முடியும். எந்த ஒரு எதிர்ப்பையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பிரியமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உறவினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும். திட்டமிடாத பிரயாணத்தால் சற்றே சிரமப்பட வேண்டியிருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரித்து காணப்படும். வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். உணவு கட்டுப்பாடு அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்புகள் வரும். எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிக்க முடியும். உத்யோகத்தில் அதிகாரிகள் ஆதரிப்பர். புது தொழில் யோகம் அமையும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்.

விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த சீக்கிரத்தில் முடிவடையும். திட்டமிட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும். பண வரவு குறைவாக இருந்தாலும் மன நிறைவு இருக்கும். வெளிவட்டார பழக்கவழக்கங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பெற்றோரின் அன்பும், ஆசியும் கிட்டும். தினசரி செலவுகள் கட்டுப்படுத்த புது யுக்திகளை கையாள வேண்டிவரும். புது வீடு மாற்றம் ஏற்படும். உடன்பிறப்பு வகையில் சில மனக்கசப்புகள் வரலாம். நண்பர்கள் சில நேரங்களில் எதிராக செயல்படலாம். பெற்றோர்களின் நலனில் அக்கறைகொள்ளவும். வண்டி, வாகனங்களை இயக்கும் போது கவனம் தேவை. விலகி நின்றவர்கள் கூட விரும்பி வந்து இணைவர். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்.

தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். நீங்கள் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பொருள் வரவு சீராக இருக்கும். பண விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ளவும். எந்த ஒரு காரியத்திலும் பிறரை நம்பாது நேரடியாக செயலில் இறங்குவது சிறப்பு. நண்பர்களின் ஆதரவு வழக்கம் போலவே தொடரும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். பொருளாதார சிரமங்கள் வெகுவாகக் குறைந்து சேமிப்பு உயர்வடையத் துவங்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். வாகனம் யோகம் உண்டு. தொலை தூர பயணங்களை அலைச்சல் ஏற்படும். வெளியிடங்களில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
பரிகாரம் : நவகிரகத்தை தினமும் 9 முறை சுற்றவும்.

மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். மனதில் பட்டதை தைரியமாக செய்ய முடியும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்ப்படும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றிகிட்டும். இனம்புரியாத கவலைகள் அவ்வப்போது வந்துபோகும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. உஷ்ணம் தொடர்பான தொந்தரவு இருக்கும். வாங்கிய கடனை அடைப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி ஒன்று வரும். காரிய தடை விலகும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளையும் சாப்பிட வேண்டாம். புது திட்டங்களை செயல்படுத்த முடியும். உத்யோகத்தில் உங்க கை ஓங்கும். தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பரிகாரம் : குருபகவானை வணங்கி வழிபடவும்

கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி நேயர்களே, இந்த வார பலன்படி, மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளில் மிகுந்த கவனம் தேவை. யாரும் நம்பை புரிந்துகொள்ளவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். இக்கட்டான சூழலில் அமைதி காப்பது அவசியம். பொருள் வரவு தொடர்ந்தாலும், பொருளாதார சிக்கல்கள் தொடரும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் ஒரு படி அதிகமாக தான் இருக்கும். வீட்டு பெரியவர்களோடு மனஸ்தாபம் தோன்றி மறையும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழல் உருவாகும். குடும்பத்தில் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. கடன் விவகாரங்களில் அதிக கவனம் கொள்ள வேண்டியது அவசியம். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். குடும்ப நபர்களிடம் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கி சகஜ நிலைக்கு திரும்ப முடியும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறக்கும். டிக்கும்.
பரிகாரம் : வரசித்தி விநாயகரை வழிபடவும்.

மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். மனக்கவலைகள் குறையும். குடும்பத்தில் பல புதுமையான விஷயங்கள் நடக்கும். குடியிருக்கும் வீட்டினை சீரமைக்க வேண்டிவரும். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்திற்காக நிறைய உழைக்க வேண்டியிருக்கும். உடல் நலம் சீராகும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பிறகு சீராகும். எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்ல பலனை தரும். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
பரிகாரம் : ஆஞ்சநேயரை வழிபடவும்
ஜூன் மாத ராசி பலன்கள் 2026
| ஜூன் மாத ராசி பலன்கள் 2026 |
| ஜூன் மாத ராசி பலன்கள் – (2026) (பராபவ வருடம் வைகாசி மாதம் 18ம் தேதி முதல் ஆனி மாதம் 16ம் தேதி வரை ) வாக்கிய பஞ்சாங்கப்படி 01-06-2026 முதல் 30-06-2026 வரை பலன்கள் கணித்து எழுதப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு ராசிக்கும் தனித் தனியே கிரக நிலையின் அடிப்படையில் எழுதப்பட்ட பொது பலன்கள் ஆகும். மேலும் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும். கிரக நிலை மாற்றம் 08-06-2026 – கடக சுக்கிரன் 15-06-2026 – மிதுன சூரியன் 20-06-2026 – ரிஷப செவ்வாய் 22-06-2026 – கடக புதன் ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஆலந்தூர் ஜோதிடர் A.வினோத் குமார் P.hd Astrology (அலைபேசி: 09003019831) |
மேஷ ராசி அன்பர்களே
அஸ்வினி 1, 2, 3, 4 பாதம், பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1ம் பாதம் முடிய)
மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுக்கு ஏற்ற இறக்கமாகவே உள்ளது. உங்கள் பேச்சில் நிதானமும், செய்யும் செயல்களில் கவனமும் தேவை. பணவரவு சுமாராக இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும். எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். அடுத்தவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. உங்கள் விருப்பத்திற்கு மாறாக ஒரு சில காரியங்கள் நடக்கலாம் குல தெய்வ வழிபாடுகளை தவறாமல் மேற்கொள்ளவும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். கொடுக்கல், வாங்கலில் மிகுந்த கவனம் தேவை. உங்கள் காரிய வெற்றிக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கும். கடன் தொல்லைகள் சில நேரங்களில் மனதை பாதிக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடும் கவனமும் தேவை. சுப காரியங்கள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்க முடியும். குடும்பத்துடன் கலந்து ஆலோசிப்பது எல்லா விஷயத்திற்கும் நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரம் தொடர்பாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.
சந்திராஷ்டமம் : 1,26,27,28,29 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
ரிஷப ராசி அன்பர்களே
(கார்த்திகை 2, 3, 4, ரோகினி 1, 2, 3, 4, மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள் முடிய)
ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த சூழ்நிலையிலும் நிதானமாக முடிவு எடுப்பது நல்லதும். தினமும் தியானம் செய்வது மனதிற்கும், உடலுக்கும் நல்லது. மனதில் புதிய உற்சாகமும் தைரியமும் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த காரியங்களை கூட எளிதில் முடிக்க முடியும். குடும்பத்தில் பொருள் விரயங்கள் ஏற்பட்டாலும் அது சுப விரயங்களாகவே இருக்கும். தடைபட்ட காரியங்கள் கூட மாறி கை கொடுக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைத்து சுகமும் நிம்மதியும் கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். திட்டமிடாத பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். வழக்கில் இருந்த இழுபறி நிலை நீடிக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உத்யோகத்தில் இட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
சந்திராஷ்டமம் : 1,2,3,4 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மிதுன ராசி அன்பர்களே
(மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை 1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 முடிய)
மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்களுக்கு எல்லா வகையிலும் அனுகூலமாகவே உள்ளது. பல சிக்கலான விஷயங்களை கூட சாதுர்யமாக பேசி முடிக்க முடியும். பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பெற்றோர்களின் ஆலோசனை முக்கியமான நேரத்தில் கிடைக்கும். வெளியிடத்தில் கடன் வாங்கி அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உடல் நிலை பொறுத்தவரை சின்ன சின்ன பாதிப்புகள் வரலாம். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் ஏற்படும். பயணத்தில் மூலம் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் புது நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 4,5,6 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கடக ராசி அன்பர்களே
(புனர்பூசம் 4ம் பாதம் முடிய, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 பாதங்கள் முடிய)
கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் பல நல்லதும், கெட்டதும் கலந்தே நடக்கும். உங்களது செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். பண வரவு அவ்வப்போது இருக்கும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். உடன்பிறப்பிடம் சுமூகமான உறவு இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். கொடுக்கல், வாங்கலில் சிக்கல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் எந்த குறையும் இல்லாமல் இருக்கும். கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வந்து போகும். உங்கள் மேல் சுமத்தப்பட்ட வீண் பழி நீங்கும். உத்யோகத்தில் வேலை பளு அதிகரிக்கும், தொழில், வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம் : 6,7,8,9 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
சிம்ம ராசி அன்பர்களே
(மகம் 1, 2, 3, 4, பாதங்கள், பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1ம் பாதம் முடிய )
சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துகொள்ளவும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். வர வேண்டிய பண கூட சற்று தாமதித்து பின் கைக்கு வரும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் நிறைய மாற்றங்களை சந்திக்க வேண்டிவரும். மனதில் தன்னம்பிக்கை தைரியம் திகரிக்கும். பொருளாதார சிக்கல்களை திறமையாக சமாளிக்க முடியும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சியான போக்கு நீடிக்கும். உடல் நலம் சீர்பெறும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பெண்களால் சில பிரச்சனைகள் வரும். உங்களுக்கு எதிராக வரும் எதிர்ப்புகள் முற்றிலும் நீங்கும். வெளியில் கடனாக கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் வரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் திருப்தி தரும். உத்யோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : 9,10,11 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கன்னி ராசி அன்பர்களே
(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம் 1, 2, 3, 4, சித்திரை 1, 2 பாதங்கள் முடிய )
கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த காரியத்தை செய்தாலும் பல முறை யோசித்து செய்வது உத்தமம். குடும்பத்தில் ஆதரவு பெருகும். தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புது நட்பு வட்டாரம் உருவாகும். சொந்த பந்தங்களிடே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். அடுத்தவர் பிரச்னையில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் அதை மனஉறுதியடன் போராடி வெற்றி பெற முடியும். உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் ஆலோசனை கேட்பது பல வகையில் உதவியாக இருக்கும். சிறு உடல் உபாதைகள் வந்து போகும். மனக்குழப்பம் தோன்றி மறையும். பெரிய மனிர்தர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்யோக பணியில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் கடுமையான போட்டி இருக்கும்.
சந்திராஷ்டமம் : 11,12,13 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
துலாம் ராசி அன்பர்களே
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 முடிய )
துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் பல திருப்பு முனையான விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் தொலைத்து போன சந்தோஷம் மீண்டும் வரும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். வராது என்று நினைத்த பொருள் கைக்கு வரும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும். அக்கம் பக்கம் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதம் ஏற்படும். உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவு ஏற்படலாம். உங்கள் பிடிவாத குணத்தை விட்டு விடுவது எல்லா வகையிலும் நல்லது. குடும்பத்தில் எல்லாரிடமும் மற்றவர்களிடம் முக்கிய விஷயத்தில் அனுசரித்து செல்வது நல்லது. பணம் தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். பேச்சில் நிதானம் அவசியம் தேவை. புதிய வீடு வாங்கும் முயற்சிகள் தாமதம் ஆகும். ஆன்மிக எண்ணம் மேலோங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சீராகும். சொந்த பந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
சந்திராஷ்டமம் : 13,14,15 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
விருச்சிக ராசி அன்பர்களே
(விசாகம் 4ம் பாதம் முடிய, பனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 பாதங்கள் முடிய )
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் பல சிக்கல்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் தானாகவே வரும். குடும்பத்தில் பல அவசர முடிவுகளால் பிரச்சனைகள் கொடுக்கும் சூழ்நிலைகள் ஏற்படலாம். வீட்டை புதிப்பிக்கவோ, வீடு மாற்றி செல்லவோ வாய்ப்பு வரும். பல பிரச்சனைக்கு நடுவே பணம் கைக்கு வந்து சேரும். குடும்ப பொறுப்புகள் அதிகமாகும். வரவுக்கு மீறிய செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். மனதில் உள்ள குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு கட்டுப்பாடு அவசியம். வீடு, வாகனங்களுக்கான செலவு அதிகரிக்கும். குடும்பத்துடன் பயணிக்க விருப்பம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்க்கற இடங்களிலிருந்து நல்ல செய்திகள், மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேருவதற்கான வாய்ப்பிருக்கிறது. கடன் வாங்கும் என்னத்தை கை விடுவது நல்லது. உடல் நலம் தொடர்பாக மருத்துவ செலவு ஏற்படலாம். திட்டமிட்ட பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் சாதகமான சூழல் நிலவும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
சந்திராஷ்டமம் : 15,16,17 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
தனுசு ராசி அன்பர்களே
(மூலம் 1, 2, 3, 4 பாதம், பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1ம் பாதம் முடிய )
தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் தொடக்கத்தில் மனக்குழப்பத்துடன் காணப்பட்டாலும், பிற்பாதியில் நல்ல திருப்பம் உண்டாகும். மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் ஏற்படும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் நாளடைவில் சீராகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு தள்ளி போடவும். வண்டி, வாகனம் வாங்கும் எண்ணத்தை சிறிது காலம் தள்ளி வைக்கவும். தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.பணம் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். தியானத்தால் மன நிம்மதி ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகரிக்கும். எங்கும், எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
சந்திராஷ்டமம் : 17,18,19 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மகர ராசி அன்பர்களே
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 பாதங்கள் முடிய)
மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியம் விரைவில் முடியும். எதிர்பாராத பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் வரவுகளும், செலவுகளும் சரிசமமாக இருக்கும். உங்களிடம் புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய வண்டி வாகன சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். ஒரு காரியம் செய்யும் முன் தீர யோசித்து செய்வது நல்லது. யாருக்காகவும், எப்போதும் ஜாமீன் கையெழுத்து போட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். பொதுப்பிரச்சனைகளை எதிர்கொள்வதில் அதிக கவனம் தேவைப்படும். எதிர்பாராத சில செலவுகளால் வெளியில் கடன் வாங்கி செலவு வேண்டிய சூழ்நிலை உருவாகும். பாலிய நண்பர்களின் நிறைய ஆலோசனை கிடைக்கும். முக்கிய காரியங்களை நீங்களே செய்து முடிப்பது நல்லது. வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. உத்யோகத்தில் மனநிறைவு ஏற்படும்.புதிய தொழில் யோகம் அமையும்.
சந்திராஷ்டமம் : 19,20,21 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
கும்ப ராசி அன்பர்களே
(அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் முடிய )
கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் பல சௌபாக்கியங்களை பெற முடியும். மனதில் புத்துணர்ச்சியும். தெம்பும் பிறக்கும். சற்றும் எதிர்பாராத பணவரவும், அதிர்ஷ்டங்களும் வந்து சேரும். புத்தி சாதூர்யத்தால் எதையும் சாதிக்க முடியும். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் பிறக்கும். வீட்டில் புது பொருள் சேர்க்கை உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். பிரியமானவர்கள் வழியில் ஏதாவது மனகசப்பு ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யாருக்கும் எந்த உத்திரவாதமும் கொடுக்க வேண்டாம். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டு. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உயர் பதவிகள் தேடி வரும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.
சந்திராஷ்டமம் : 21,22,23,24 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
மீன ராசி அன்பர்களே
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 பாதங்கள் முடிய )
மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் விருப்பத்தினை நிறைவேற்ற நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். முயற்சி செய்யும் எல்ல காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இருக்காது. எதிர்ப்புகளை சமாளிக்கும் மனவலிமை உருவாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகமும் அவர்களால் நிறைய ஆதாயமும் உண்டு. தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். எதிரிகளின் பலம் குறையும். குடும்பத்தில் இதமான சூழல் நிலவும். கடன் பிரச்சனைகள் தீரும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். உங்களை சுற்றி இருப்பவர்களை அனுசரித்து போவது நல்லது. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். அடுத்தவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடா வேண்டாம். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
சந்திராஷ்டமம் : 24,25,26 தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்