இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடந்த ஆயிரத்து 757 வீதி விபத்துகளில் ஆயிரத்து 870 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

இந்த புள்ளிவிவரத்தை போக்குவரத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் தலைவர் இந்திக்க ஹபுகொட வெளியிட்டுள்ளார்.
வீதி விபத்துகளால் நாளாந்தம் சுமார் ஏழு முதல் எட்டு பேர் வரை உயிரிழப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சாரதிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், பாதசாரிகள் மற்றும் பயணிகள் உள்ளிட்ட அனைத்து வீதி பயனர்களும் போக்குவரத்துச் சட்டங்களை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என பிரதி பொலிஸ் தலைவர் இந்திக்க ஹபுகொட தெரிவித்துள்ளார.
- மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிராக கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்.
- இங்கிலாந்து தொடருக்கான இலங்கை T20 அணியை அறிவிப்பு – தசுன் ஷானகா மீண்டும் கேப்டனாக தொடர்கிறார்
- எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து; பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணிகள் தொடங்குகின்றன!
- பேருந்தை கவனயீனமாக செலுத்திய வழக்கில்; பேருந்து சாரதியொருவருக்கு ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை.
- இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காலி முகத்திடல் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு
- இலங்கையில் வெள்ள அபாயம்! கிண்ணியா, மூதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை!
அதேநேரம், வீதி நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும், மேலும் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க சுய ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.