தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் கூட ஆகவில்லை. எங்களை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை அவருக்கு (விஜய்) இல்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சென்னை, அமைந்தகரையில் இலவச மருத்துவ முகாமை நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கூட்டணியை மட்டும் பலமாக வைத்து இருந்தால் போதுமா, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டாமா? திமுக கூட்டணியை அசைப்போம். உறுதியாக ஆட்சி மாற்றம் வரும்.
தேஜ கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி வலுப்பெறும். திமுக தொடர்ந்து இருமுறை ஆட்சி அமைத்த வரலாறு இல்லை. எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம். எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும்.
தமிழகத்தில் நல்லாட்சி மலரும். விஜய் கட்சி ஆரம்பித்து பிரசாரத்தை ஆரம்பித்து இருக்கிறார். அவருடைய நோக்கமும் திமுகவை அகற்றுவது தான். தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் கூட ஆகவில்லை. ஒரு எம்எல்ஏக்கள் கூட கிடையாது. இப்போது தான் கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள்.
எங்களை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை அவருக்கு (விஜய்) இல்லை என்று நான் நினைக்கிறேன். புதிதாக கட்சி ஆரம்பித்தால் வேடிக்கை பார்க்க நிறைய பேர் வருவார்கள். தேர்தல் காலத்தில் ஓட்டு எவ்வளவு வாங்குவார் என்பது தான் முக்கியம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
- தித்வா புயல் தாக்கிய இலங்கைக்கு உதவ தமிழகம் தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- சந்தியில் நேட்டோ (NATO): ஐரோப்பாவின் எழுச்சி, அமெரிக்காவின் திசைமாற்றம் மற்றும் மேற்கத்திய பாதுகாப்பின் மறுவடிவம்
- அபூதாபியில் நடைபெறவுள்ள முக்கிய அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா–உக்ரைன்–இங்கிலாந்து தயாராகின்றன
- வடகிழக்கு தமிழ் கட்சிகளிடையே கொள்கை ரீதியான ஒருமித்த கருத்து ஆரம்பம்; தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் முக்கிய நடவடிக்கை.
- நீதிமன்றத்தில் நடந்த அதிர்ச்சி! திருப்பரங்குன்றம் வழக்கில் எதற்கு நமது முறையீட்டை எதிர்க்க வேண்டும் ?
- 🔴நேரலை 17-12-25 | நேருஜி – வேட்பாளர் அறிமுகக்கூட்டம்