கம்பஹா – திவுலப்பிட்டிய பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான பெண் திவுலப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்க அருகில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் கம்பஹா – வெயாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஆவார்.
சந்தேக நபரான பெண் நீண்ட காலமாக இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- “கொலைகளை ஈபிடிபி’தான் செய்ததாக சதா வெளிப்படையாகக் கூறுகிறார்,” – இது குறித்து விசாரணை நடத்தப்படுமா? – இலங்கை நாடாளுமன்றத்தில் சிவஞானம் சிறீதரன் எம்.பி கேள்வி!
- விசாரணைக்கு அழைக்கப்பட்டால், ராஜபக்சக்கள் விசாரணைக்குச் செல்ல வேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
- இலங்கைத் தீவின் மொத்த நிலப்பரப்பில் 30 சதவீதத்தைக் கொண்ட 14 மாவட்டங்கள் நிலச்சரிவு அபாயகரமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
- அம்பாந்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
- சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் வாசனை திரவியங்களை இலங்கைக்கு கொண்டு வந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இலங்கை அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்!
இந்நிலையில், சந்தேக நபரான பெண் ஒவ்வொரு பாடசாலை மாணவர்களுக்கும் 5500 ரூபா முதல் 7000 ரூபா வரை இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் உள்ள கணவர் தனக்கு இந்த இலத்திரனியல் சிகரட்டுகளை அனுப்பி வைத்ததாக சந்தேக நபரான பெண், பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.