‘சாராயம் விற்பது தான், தி.மு.க., இளைஞரணி கோட்பாடா’ என, தமிழக பா.ஜ. தலைவர் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில் சாராயம் குடித்து, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரத்தில் 22 பேர், கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்தனர். இன்னும் எத்தனை உயிர்களை தி.மு.க., அரசு காவு வாங்கப் போகிறது. கள்ளக்குறிச்சியில் சாராயம் காய்ச்சியதாக, கோவிந்தராஜ் கைது செய்யப்பட்ட போது, அவர் தி.மு.க., நிர்வாகியே இல்லை என, தி.மு.க., கதை கட்டியது.
தற்போது, தி.மு.க., கவுன்சிலரும், இளைஞரணி நிர்வாகியுமான சுரேஷ்குமார், சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததற்காக கைதாகி உள்ளார். இதற்கு, தி.மு.க., என்ன கதை கூறப்போகிறது.
சாராயம் விற்பது தான், தி.மு.க.,வின் இளைஞரணி கோட்பாடா. இந்த செயல்களில் ஈடுபடத்தான், தி.மு.க., கவுன்சிலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினாரா? சாராயம் ஆறாக ஓடும் இந்த ஆட்சி, பொற்கால ஆட்சியா? – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திமுகவின் B டீமா சீமான் ?
- சென்னையை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்; நூற்றுக்கணக்கான காகங்கள் இறக்கின்றன.
- “சீமைக்கருவேல் மரங்களை அகற்ற தமிழக அரசு பல ஆண்டுகளாக ஒரு குழுவை அமைத்தும், அதில் கவனம் செலுத்தப்படவில்லை” – ம.தி.மு.க பொதுச் செயலாளர்
- தமிழ்நாட்டின் எல்லையை தங்கள் எல்லையென அறிவிப்புப் பலகை வைக்கும் கேரள அரசின் அத்துமீறலை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது! – சீமான் எச்சரிக்கை
- தமிழ்தேசிய தத்துவம் பிழையானதா? | மக்கள் முதலான முதல்வன் சீமானுடன்..
- ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மூன்றாவது இடத்திற்குப் பின்தங்கியுள்ளார்.