தாக்குதலின் பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை (25) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் டெல்மார்வத்த, ஹல்கிரான் ஓய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர் நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
- இலங்கை நாணய மாற்று விகிதம்
- மத்திய கிழக்கு போர்நிறுத்தத்தின் தாக்கம்: கொழும்பு பங்குச் சந்தையில் வலுவான ஏற்றம்.
- இலங்கை, குருணாகலில் பொல்கஹவெல பிரதேசத்தில் மருந்தகம் நடத்தும் போர்வையில் போதை மாத்திரைகளை விற்பனை
- தேவைப்பட்டால், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக பாதுகாப்பைக் கோரலாம் என்று இலங்கை காவல் துறை தெரிவித்துள்ளது.
- அரச வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு எதிராக கொழும்பில் இலங்கை அரச வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- மீனவ சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேவையான ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்கும் – இலங்கை பிரதமர்
மேலும் பணப் பரிவர்த்தனை தொடர்பாக அடையாளம் காணப்பட்ட ஒரு நபருடனான தகராறு காரணமாக ஏற்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சந்தேக நபரைக் கைது செய்ய நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.