குருணாகலில் பொல்கஹவெல பிரதேசத்தில் மருந்தகம் நடத்தும் போர்வையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இரண்டு சந்தேக நபர்கள் பொல்கஹவெல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் பொல்கஹவெல பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடிதரமுல்ல மற்றும் பனலிய பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 24 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 2,000 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், போதை மாத்திரைகள் அடங்கிய 10 பொதிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் இருவரும் மருந்தகம் நடத்தும் போர்வையில் நீண்ட காலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்கஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- முத்துநகர் விவசாயிகளின் சத்தியாகிரகப் போராட்டம் 22வது நாளாகத் தொடர்கிறது.
- புத்தளத்தில் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- பிரித்தானியாவின் அரசியல் நிலநடுக்கம் கீயர் ஸ்டார்மர், தொழிற்கட்சியின் வீழ்ச்சி மற்றும் சிதைவடையும் ஐக்கிய இராச்சியம்: ஒரு புதிய அரசியல் யுகத்திற்குள் நுழையும் தேசம்
- உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்தவர் என்ற புதிய சாதனையை லயோனல் மெஸ்ஸி படைத்துள்ளார்.
- இலங்கை மின்சார வாரியத்தின் 23,000 ஊழியர்கள் 4 அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவார்கள் – எரிசக்தி அமைச்சர்
- யூதர்கள் சென்ற பாதையில் ஈழத்தின் அடைவு: வரலாற்று ஒப்பீட்டின் ஊடாக ஒரு அரசியல் திசை