இதுபற்றிய விவரம் வருமாறு;
பதான் மாவட்டத்தில் உள்ள மோதி பிப்லி கிராமத்தின் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில், சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்போது, அவ்வழியாக இன்று (05.10.2025) சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
எதிர்பாராத விதமாக, சரக்கு லாரி தவறான திசையை நோக்கி சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்திசையில் வந்து கொண்டிருந்த பிக்கப் வேன் ஒன்றின் மீது மோதியது. அதன் பின்னால் வந்து கொண்டிருந்த ஜீப் ஒன்றும், இரு பைக்குகளும் ஒன்றுடன் ஒன்று மோதின.
விபத்தை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு திரண்டனர். போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் சடலங்களை பொதுமக்கள் மீட்டனர். விபத்தில் மொத்தம் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- 25 ஆண்டுகள் பழைய கொள்ளை வழக்கின் முதன்மை குற்றவாளியை AI தடம் காட்டி ஆக்ரா போலீஸ் கைது!
- ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது!
- 195 பாகிஸ்தானிய குடியேறிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.
- பாஜக தேசியத் தலைவராக பொறுப்பேற்ற நிதின் நபீன் — முதல் கட்ட அமைப்பு மாற்றங்கள் தொடக்கம்
- இந்தியாவில் ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.3,000 கோடி நன்கொடை.
- அமெரிக்கா-ஈரான் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமானங்களையும் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ரத்து செய்துள்ளன.