அம்பாந்தோட்டையில் கிரிந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒருகெம்முல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (09.10.2025) மாலை 06.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
⚠️ எச்சரிக்கை: இங்கே காணப்படும் படம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டது. இது விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உண்மையான நபர்களையோ நிகழ்வுகளையோ பிரதிபலிக்காது.
உயிரிழந்தவர் இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர் கிரிந்த – ஒருகெம்முல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் உள்ள பயிர்களை வன விலங்குகளிடமிந்து பாதுகாப்பதற்காக தோட்டத்தில் தங்கியிருந்த போது காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.