வானிலை மையம் அறிக்கை:

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
இந்த அமைப்பு, இன்று வடக்கு, வடமேற்கு திசையில், மியான்மர் – வங்கதேச கடற்கரையை நெருங்க வாய்ப்புள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகத்தில் வடமாவட்டங்களில் சில இடங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலுார், திருச்சி மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் காரைக்காலில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நாய்களில் உள்ள உண்ணிகள் மனிதர்களைக் கடிப்பதால், ‘ஸ்க்ரப் டைபஸ்’ எனப்படும் உண்ணி மூலம் பரவும் நோய் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மதுரை எல்ஐசி அதிகாரி மரணம் கொலை என உறுதி; சக ஊழியர் கைது
- புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கன மழையால் 9 ஆயிரம் ஹெக்டரில் இளம் சம்பா தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
- மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
- கள்ளக்குறிச்சிக்கு செல்லும் வழி தெரியாத ஒருவர் காசாவைப் பற்றி ஏன் கவலைப்படுகிறார் ? – அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்புகிறார்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை கனமழைக்கு வாய்ப்புஉள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.