தித்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவளித்து துணை நிற்கிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Jiyoon Chung) தனது Xதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்திடம் 20,000 பாலிசாக்குகளை கையளித்தது. இந்த பாலிசாக்குகள் கரைகளை வலுப்படுத்தவும், வெள்ள நீரின் வேகத்தைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
சமீபத்தில் தகவல் தொடர்பு உபகரணங்களை அமெரிக்கா கையளித்ததன் தொடர்ச்சியாக இந்த உதவி அமைந்துள்ளது.
மேலும், இத்தகைய சவாலான நேரத்தில் எங்களின் தொடர்ச்சியான ஈடுபாட்டைப் பிரதிபலிக்கிறது. வரும் வாரங்களில், ஜெனரேட்டர்கள், சமையல் அடுப்புகள், நீர் தொட்டிகள் மற்றும் கூடாரங்கள் ஆகியவற்றையும் உலக உணவுத் திட்டத்துடன் இணைந்து நாங்கள் வழங்குவோம் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Jiyoon Chung) தனது Xதளத்தில் பதிவிட்டுள்ளார்.
- சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகளையும் 7 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது.
- லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
- இலங்கை வானிலை அறிக்கை
- ஒரு சிலருக்கு மட்டும் இழப்பீடு வழங்குவதன் மூலம் செம்மணி பிரச்சினையை கை கழுவ முயற்சி – சோமரத்ன ராஜபக்ஷ குற்றம் சாட்டுகிறார்.
- இலங்கையின் மலையகம் பகுதிகளில் உதவியின்றி சிக்கித் தவிக்கும் மக்களின் அவலநிலை, மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.
- மாத்தறை, வெல்லமடம பகுதியில் வீதி தடையினை மீறி வாகனம் ஓட்டிச் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.