அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான எந்தவொரு தகவலையும் உடனடியாக தெரிவித்துக் கொள்ள இரண்டு கட்டணமில்லா தொலைபேசி சேவைகள் தற்போது 24 மணிநேரமும் செயல்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுடன் இணைந்துள்ள தேசிய மகளிர் சபையின் 1938 பெண்கள் உதவி அவசர தொலைபேசி இலக்கம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 சிறுவர் உதவி அவசர தொலைபேசி இலக்கங்கள் மூன்று மொழிகளில் இலவசமாக செயல்படுகின்றன.
பெண்கள் தொடர்பான தகவல்களுக்கு – 1938
சிறுவர்கள் தொடர்பான தகவல்களுக்கு – 1929
இந்த இரண்டு சேவைகளுக்கும் கட்டணம் இன்றியே, 24 மணி நேரமும் அழைத்து தகவல் பகிர முடியும்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு, நலன், அவசர உதவி மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க இவ்விரு ஹாட்லைன்களும் முக்கிய பங்கு வகிப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
தேவைப்படும் தருணங்களில் உடனடியாக தகவல் தெரிவித்து பாதுகாப்புக்கு ஒத்துழைக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
- தங்காலை கடலில் நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
- சீமான் 10 லட்சம் வழங்கினார்!
- கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்க எச்சரிக்கை: எதிர்ப்புத் தெரிவித்த நாடுகளுக்கு புதிய சுங்க வரிகள் மிரட்டல்
- Linguistic Exclusion in Times of Disaster: Sri Lanka’s Greatest Ongoing National Failure
- பரந்தன் – முல்லைத்தீவு, A35 வீதி முரசுமோட்டை பகுதியில் டிப்பர் மற்றும் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
- பிரிட்டனில் பணவீக்கம் 3% ஆக சரிவு: பெட்ரோல் மற்றும் பாண் விலை குறைவு முக்கிய காரணம்
