தென் மாவட்டங்களை நடுங்கவைக்கும் வகையில் நேற்று கடுமையான குளிர் பதிவாகி உள்ளது. மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பகலிலேயே ஊட்டி, கொடைக்கானலை ஒத்த குளிர் நிலவியது.

திருநெல்வேலியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று 22 டிகிரி வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது. டிசம்பர் – ஜனவரி மாதங்களிலும் இதுபோன்ற பகல் நேர குளிர் இதற்கு முன் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் 22.6 டிகிரி வெப்பநிலை பதிவாகி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 2011ஆம் ஆண்டு 24 டிகிரி வெப்பநிலை மட்டுமே பதிவாகியிருந்தது.
தூத்துக்குடியில் நேற்று 20.5 டிகிரி வெப்பநிலை பதிவு செய்யப்பட்டு, 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட 25.5 டிகிரி சாதனையை முறியடித்துள்ளது.
- “ஸ்டாலினை ஆயிரம் விளக்கிலும், உதயநிதி சேப்பாக்கத்திலும், கனிமொழி திருச்செந்தூரிலும் போட்டியிட” தி.மு.க.’வினர் விருப்ப மனு அளித்தனர்.
- திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அமைச்சர் ரகுபதிக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
- சென்னையில் இன்றைய தங்க விலை நிலவரம்
- விகடனும் மொத்த வியாபாரமும் ! | நான் சொன்னது என்ன அவர்கள் எழுதியது என்ன ?
- இலங்கை ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நடிக்கிறார்; விஜய் நடித்து விட்டு ஆட்சிக்கு வந்துள்ளார். – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்.
- “திமுக இளைஞர் அணி மண்டல மாநாட்டிற்காக ஜல்லிக்கற்கள் மற்றும் மண் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வெட்கக்கேடானது” – சீமான்.
கோவில்பட்டி 21.8, தென்காசி 21, திருச்செந்தூர் 20, பாம்பன் 23, கன்னியாகுமரி 26.6 என தென் மாவட்டங்கள் முழுவதும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு குளிர் பதிவாகியுள்ளது. இத்தகவலை தன்னார்வ வானிலை ஆய்வாளர் தென்காசி ராஜா தெரிவித்துள்ளார்.