ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் வியாழக்கிழமை (29-01-2026) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 804 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 799 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது,:

443 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும்,
878 கிராம் ஐஸ் போதைப்பொருளும்,
04 கிலோ 423 கிராம் 180 மில்லிகிராம் கொக்கேயின் போதைப்பொருளும்,
02 கிலோ 208 கிராம் கஞ்சா போதைப்பொருளும்,
9540 கஞ்சா செடிகளும்,
001 கிராம் குஷ் போதைப்பொருளும்,
009 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும்,
6231 போதை மாத்திரைகளும்,
274 கிராம் 250 மில்லிகிராம் மதனமோதக மாத்திரைகளும்,
02 கிலோ 006 கிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்களில் 05 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
- இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கைக்குப் பயணம் – இருதரப்பு உறவுகள் குறித்த முக்கியப் பேச்சுவார்த்தைகள்!
- இந்திய மத்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்தம் செய்து, கேரளா அரசு சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
- உணவகத்தில் தீ விபத்து – ஹவுன்ஸ்லோ
- ஜாமீன் என்பது அரசியல் உரிமை; தண்டனை அல்ல: முன்னாள் தலைமை நீதிபதி டி.வை. சந்திரசூட் வலியுறுத்தல்
- ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி
- ஐரோப்பா விளிம்பில்: விண்வெளிப் போர், அணுசக்தித் தடுப்பு மற்றும் மேற்கத்திய அரசியல் பிளவுகள்.