நெடுந்தீவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, கடற்படையின் விசேட படகு மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நெடுந்தீவில் இதுவரை காலமும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒரு பஸ் மாத்திரம் சேவையில் ஈடுபட்டிருந்ததாகவும், நீண்ட நாட்களாக குறித்த பஸ், பழுதடைந்த நிலையில், கடும் சிரமத்திற்கு மத்தியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மக்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு விசேட கூட்டத்தில், இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்;ளது.
- யாழ்ப்பாணம், நாவற்குழியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்தார்
- மண்டைதீவு கூட்டுப் புதைகுழி வழக்கு; விசாரணை மார்ச் 31, 2026’க்கு ஒத்திவைக்கப்பட்டது.
- நினைவு வணக்கம் – நவம்பர் 30
- அகவை வாழ்த்து – நவம்பர் 03
- ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறாத நிறுவனத்திற்கு எதிராக மீனவர்கள் போராட்டம்!
- 01.11.1990 அன்று முந்திரிகைக் குளத்தில் சிங்களப் படைமுகாம் தாக்கியழிக்கப்பட்டது தொடர்பான பார்வை.
இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கூறியிருந்த நிலையில், சுமார் 05 மாதங்களின் பின்னர் புதிய பஸ், சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை காலமும் நெடுந்தீவில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பஸ், திருத்த வேலைகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.