148
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் யானை தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர், சிகிக்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை (01-03-2026) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் முனைக்காடு கிராமத்தினை சேர்ந்த 74 வயதுடையவர் ஆவார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை முனைக்காடு கிராமத்திற்குள் உள்நுழைந்த காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தியத்துடன் மனிதர்களையும் தாக்கியிருந்தது.
இதனால் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
You Might Be Interested In
- தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு எதிராக போராட்டம் – அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை
- “புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
- இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
- உயிருக்கு ஆபத்தான போதைப்பொருட்களின் பயன்பாட்டால் நம் நாட்டில் இளம் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. – ஆளுநர் வேதநாயகன்
- அகவை வாழ்த்து – ஜனவரி 11
- நினைவு வணக்கம் – செப்டம்பர் 21
அவ்வாறு அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவரே இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அந்த வகையில் குறித்த கிராமத்தில் யானை தாக்கி இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிட த்தக்கது.
You Might Be Interested In