பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பலநாள் மீன்பிடி படகையும் கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கடற்படையினரின் நடவடிக்கையில், போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த மற்றுமொரு மீன்பிடி படகை இன்று திங்கட்கிழமை (16-03-2026) கண்டுபிடித்துள்ளனர்.
அதில் உள்ள போதைப்பொருளின் அளவை இப்போதே சரியாகக் கூற முடியாது. படகை கரைக்கு கொண்டு வந்த பின்னரே அது குறித்துத் தெரிவிக்க முடியும்.
- 26.09.2025 நீங்காத நினைவுகளில்…
- தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், வேட்பாளர்கள் கோடிக்கணக்கான 500 ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்துள்ளனர், அதனால் மக்களிடையே அதிக புழக்கம் இல்லை.
- தேசத்தின் குரல்: கலாநிதி அன்ரன் பாலசிங்கம் ஈழத் தமிழ் தேசியத்தின் அரசியல் அச்சாணி (1938 – 2006)
- ரஃபேல் போர் விமானத்தில் பயணித்தார் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு
- கேணல் ரமணன் | 21.05.2006
- ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பின் ஊடக முன்னோடி மற்றும் தமிழ் தேசிய அரசியலின் மாவீரன்
இதற்கு முன்னரும் கடந்த வாரத்தில் தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திய 03 பலநாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் கண்டுபிடித்திருந்தனர்.
அதன்படி, இந்த ஆண்டில் மட்டும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 07 பலநாள் மீன்பிடி படகுகளை கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளோம் என்றார்.