சீமான் நேரலை 04 மே 2026
Chennai – சென்னை
கோடை வெப்பத்தின் உச்சம் எனக் கருதப்படும் “கத்திரி வெயில் காலம்” இன்று தொடங்குகிறது.
கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்குகிறது. இந்த கால கட்டத்தில் வெப்பத்தின் தாக்கம், வழக்கத்தை விட 3 டிகிரிக்கு மேல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், மார்ச் மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இருப்பினும், மே 4 முதல் 28ம் தேதி வரையிலான 24 நாட்கள் கத்திரி வெயில் காலமாக வரையறுக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில், கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். குறிப்பாக, உச்சபட்ச வெப்பம் பதிவாகும்.
நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 10 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், 8; மதுரை மாவட்டம் சோழவந்தான், சாத்தியார் தலா, 7; ஆண்டிப்பட்டி, தானியமங்கலம் பகுதிகளில் தலா, 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
சத்தீஸ்கர் தெற்கு முதல் தெலுங்கானா, ஆந்திரா வழியாக தமிழகத்தின் குமரிக்கடல் வரை, நிலத்தில் இருந்து 1.5 கி.மீ., உயரத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரியில், இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், திருவண்ணாமலை, கரூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில், இன்று முதல் வரும் 7 வரை, அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகலாம். கடலோர மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பத்தால், வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படலாம்.
எறிகணை வரிகள் எழுதி தமிழர்களின் இதயங்களில் உறங்கிக்கொண்டிருந்த விடுதலை உணர்வை தட்டி எழுப்பிய புரட்சியாளர்..!
தம்முடைய கந்தகக்குரலால் தாயக கீதம் இசைத்த பாசறைப் பாணர், தமிழீழத் தாயகப்பற்றாளர், ஐயா தேனிசை செல்லப்பா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
எறிகணை வரிகள் எழுதி தமிழர்களின் இதயங்களில் உறங்கிக்கொண்டிருந்த விடுதலை உணர்வை தட்டி எழுப்பிய புரட்சியாளர்..!
தமிழ்த்தேசியத் தலைவரின் பேரன்பையும், பெருமதிப்பையும் பெற்ற பெருந்தகை..!
என் மீதும் நாம் தமிழர் கட்சி மீதும் பேரன்பு கொண்டு நேசித்து, நாம் தமிழர் மேடையை தம் இன்னிசையால் நிறைத்த
தமிழிசை ஏந்தல், விடுதலைப் பாணர் ஐயா தேனிசை செல்லப்பா அவர்களின் மறைவு தமிழினத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.
ஐயாவின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தாயகப்பற்றாளர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.
தம்முடைய எழுத்து, இசை, குரல் என்று யாவற்றையும் தாயக விடுதலைக்கு ஒப்புவித்து, வாழ்நாள் முழுவதும் தமிழ் மண்ணிற்கும், மக்களுக்காகவுமே வாழ்ந்து மறைந்த போற்றுதற்குரிய பெருமகன், பாசறைப்பாணர் ஐயா தேனிசை செல்லப்பா அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கம்!





தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கும் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும், 8:30 மணி முதல் மின்னணு இயந்திரத்தில் ஓட்டு எண்ணும் பணி துவங்கும் எனவும் விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 23ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக அமைதியாக நடந்து முடிந்தது. ஓட்டு எண்ணும் இயந்திரங்கள்,ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஓட்டு எண்ணிக்கை தொடர்பான நடைமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதில்,
தமிழகம் முழுவதும் 62 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.ஓட்டு எண்ணிக்கை மே 4 ம் தேதி காலை 8 மணிக்கு துவங்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். 8: 30 மணிக்கு மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணும்பணி துவங்கும்.
மையத்தின் ஒரு பகுதியில் தபால் ஓட்டுகளும், மற்றொரு பகுதியில் மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படும். 500 தபால் ஓட்டுகளுக்கு ஒரு மேஜை என்ற விகிதத்தில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.தபால் ஓட்டுகள் எண்ணும் பணி முழுமையாக முடிந்த பிறகே, மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் இறுதிச்சுற்று எண்ணிக்கை துவங்கும்.
தேர்தல் பணியில் ஈடுபட்ட 3.60 லட்சம் பேரில் 2.88 லட்சம் பேர் தபாலில் ஓட்டுப் போட்டு உள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
தமிழகம்: பதிவான வாக்குகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடாமல் தாமதப்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு முடிந்து மூன்று நாட்களான நிலையில், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் எவ்வளவு ஓட்டுகள் பதிவாகின என்ற விபரத்தை வெளியிடாமல், தேர்தல் கமிஷன் தாமதம் செய்து வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தல், கடந்த 23ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 5.73 கோடி வாக்காளர்களில், 4.87 கோடி பேர் ஓட்டளித்துள்ளனர். ஓட்டுப்பதிவு சதவீதம் 85.10. தேர்தலில், 86 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்கவில்லை.
வழக்கமாக ஓட்டுப்பதிவு முடிந்ததும், அன்று இரவு தோராயமான சராசரியாக ஓட்டுப்பதிவு சதவீதத்தை தேர்தல் கமிஷன் அறிவிக்கும்; மறுநாள் துல்லியமான இறுதி விபரம் வெளியிடப்ப டும்.
மேலும், ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக ஆண்கள், பெண்கள், மூன் றாம் பாலினத்தவர் என ஒவ்வொரு தரப்பிலும் எவ்வளவு பேர் ஓட்டளித்துள்ளனர் என்ற விபரங்களும் வெளியிடப்படும்.
ஆனால், இம்முறை ஓட்டுப்பதிவு முடிந்து மூன்று நாட்களாகியும், சட்டசபை தொகுதி வாரியாக பதிவான ஓட்டு விபரங்களை தேர்தல் கமிஷன் இதுவரை வெளியிடவில்லை.
சட்டசபை தொகுதிவாரியாக பதிவான ஓட்டுகள் விபரத்தை வெளியிட, தமிழகத்தில் உள்ள தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆர்வம் காட்டாததே, இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறுகையில், ‘அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு விபரத்தை சரிபார்த்து, இறுதி விபரத்தை பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டு விட்டது. எனவே, ஓட்டுப் பதிவின் முழு விபரங்கள் இன்று வெளியிடப்படும்’ என்றனர்.
ஆந்திராவில் தலைமறைவாக இருந்த,’யூ டியூபர்’ சவுக்கு சங்கர், சென்னை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சமீபத்தில், ஆலந்துார் மற்றும் சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசாரால், பண மோசடி வழக்கில், ‘ யூ டியூபர்’ சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவ காரணங்களுக்காக, சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.
எனினும், அவர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி, ‘ யூ டியூப்’ சேனலில், தி.மு.க., அரசு மற்றும் அதிகாரிகளை விமர்சித்து, ‘வீடியோ’ வெளியிட்டு வந்தார்.
இதனால், அவரது இடைக்கால ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என, சென்னை மாநகர போலீசார், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
சவுக்கு சங்கர், ஜாமின் நிபந்தனைகளை மீறியதால், அவரை கைது செய்யலாம் என, சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சங்கர், தலைமறைவாக இருந்து, தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதனால் அவரை, தலைமறைவு குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர்.
இந்நிலையில், ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கர், தனியார் விடுதி ஒன்றில், சென்னை மாநகர போலீசாரால் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார். அவருடன், அவரது தோழி மாலதி இருந்ததாக கூறப்படுகிறது.
8,000 ரூபாய் கூப்பனுக்காக முதலமைச்சர் பதவியைத் தருவீர்களா? ஸ்டாலினிடம் சீமன் கேள்வி எழுப்பினார்.
“தி.மு.க., தரும் 8,000 ரூபாய் கூப்பனை வைத்து, என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்றால், முதல்வர் பதவியை கொடுப்பீர்களா?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் ஆலந்துார், அம்பத்துார், வில்லிவாக்கம், ராயபுரம் உள்ளிட்ட தொகுதிகளில், நா.த.க., வேட்பாளர்களை ஆதரித்து, சீமான் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:
அனைத்து மதங்களுமே மது குடிப்பது பாவம் என கூறினாலும், அரசே அதை விற்கிறது. கடந்த 60 ஆண்டுகளாக ஆண்ட பிறகும், குடும்பத் தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் தருகின்றனர்.
அப்படியென்றால், ஒரு நாளைக்கு, 30 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலையில், தி.மு.க., – அ.தி.மு.க., ஆட்சியாளர்கள், மக்களை வறுமையில் வைத்துள்ளனர்.
இப்போது ஐந்தாண்டு ஆட்சிக்கு பின், 2,000 ரூபாய் கொடுக்கிறோம் என்றால், வறுமை வளர்ந்துள்ளது என்பதை உணர்த்துகிறது.
அவர்கள் அறிவிக்கும் 2,000 ரூபாய், 2,500 ரூபாய், 8,000 ரூபாய் கூப்பன், 10,000 ரூபாய் வறுமை ஒழிப்பு தொகை போன்றவற்றை, எங்கிருந்து தருவர் என்ற கேள்வி எழாத வரை, மாற்றம் ஏற்படாது.
இலவசங்கள் அறிவித்தால் தான் ஓட்டு என்றால், ‘௧ கிலோ தங்கம், கார், அதற்கு பெட்ரோல், ஊதியத்துடன் ஓட்டுநர்’ என நான் தருவதாக சொன்னால் ஏற்பீர்களா? அப்படி கொடுத்தால், உங்களுக்கு படிப்பு, தகுதியெல்லாம் எதற்கு?
தி.மு.க., தரும் 8,000 ரூபாய் கூப்பனை வைத்து, என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்றால், முதல்வர் பதவியை கொடுப்பீர்களா? பைத்தியங்கள் எனக்கு ஓட்டு போட வேண்டாம்; உதயசூரியனுக்கு போடுங்கள். ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும்; நாடு, சுடுகாடாக மாறட்டும்.
இதற்கு முன், இரண்டு வயது குழந்தையை தான் கற்பழித்தனர். மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கருவில் இருந்து வெளியே வந்தவுடனேயே கற்பழித்து விடுவர். நல்லாட்சி அமைய, சிந்தித்து ஓட்டு போடுங்கள். இல்லையென்றால் குவார்ட்டர் குடித்து விட்டு, வீட்டில் படுத்திருங்கள்.
அரை சதவீதம் ஓட்டு வைத்திருப்பவர்களிடம் கூட, கூட்டணி பேரம் நடத்தியவர்கள், என்னிடம் எப்படியெல்லாம் பேரம் பேசியிருப்பர்.
நேற்று கூட, கூட்டணி பேச்சு நடந்தது. குறிப்பிட்ட தொகுதிகளை தேர்ந்தெடுந்து போட்டியிடுங்கள். அங்கு நாங்கள் வாபஸ் பெறுகிறோம். மற்ற தொகுதிகளில் நீங்கள் வாபஸ் பெறுங்கள் என்றனர். நான் நிராகரித்து விட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
“திமுக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக” வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து வாசன் கூறியதாவது:தென்னிந்தியாவிலேயே தமிழர்களுக்கு தலைகுனிவு ஏற்படுத்தும் விதமாக, தமிழகத்தில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு மிக மோசமாக உள்ளது. கொலை, கொள்ளை, போதை பொருள், பாலியல் தொந்தரவுகளை தி.மு.க, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பி, ஆட்சி மாற்றத்தை கொண்டு வர மகளிர் தான் அடித்தளம்.
கோவிலுக்குப் போகாதவர்களுக்கும், கோவிலைப் பற்றி கவலைப்படாத அரசுக்கும், நெற்றியிலே பொட்டு வைப்பதே தவறு என நினைப்பவர்களுக்கும் வாக்களிக்காதீர்கள். அனைத்து மதமும் சமம் என கருதுவோருக்கு வாக்களியுங்கள்.
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் தான், மகளிருக்கு அதிக திட்டங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், தி.மு.க.,வினர் வாக்கு வங்கி அரசியல் தான் செய்கின்றனர். மத்திய அரசை எதிரி கட்சியாக பார்ப்பதால் தான் தமிழகம் வளர முடியவில்லை.இவ்வாறு வாசன் கூறினார்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள் ‘பிட்’ வைத்திருந்தாலும், அதை கண்டுபிடித்தாலும் தவறாக முடிவதாக தமிழக தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
தமிழகத்தில், 8.27 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது. அதேபோல், 9 லட்சம் மாணவர்கள் எழுதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்., 6ம் தேதி வரை நடக்க உள்ளது.
மாணவர்களை கண்காணித்து முறைகேடுகளை தவிர்க்கும் வகையில், 50,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் 5,000க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், தேர்வறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என அனைவருமே, எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
இந்தாண்டு பொதுத்தேர்வில், கடந்தாண்டை விட அதிக தேர்ச்சி சதவீதம் பெற வேண்டும் என, பள்ளிக் கல்வி துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், ‘காப்பி’ அடிக்கும் மாணவர்களிடம் கடுமை காட்டக் கூடாது என, பறக்கும் படையினருக்கு, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாணவர்கள், தற்போது புத்தகங்களை, ‘மினி ஜெராக்ஸ்’ எடுத்து, நுாதன முறைகளில் பிட் அடித்து வருகின்றனர். தேர்வறை கண்காணிப்பின் போது, மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதைக் கண்டறிந்து அவர்களிடம் சொன்னால், எழுதாமல் பிட் வைத்திருந்தால் கண்டித்து விட்டு விடும்படி கூறுகின்றனர். நாங்கள் மாணவர்களை சோதனையிட்டால், அது, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் என்கின்றனர்.
மாணவியரின் அருகில் சென்று, ஆண் ஆசிரியர்கள் கண்காணித்தால், பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இதனால், ‘பிட் அடித்தாலும் தப்பு; அதை பிடித்தாலும் தப்பு’ என்பதால், நாங்கள் எதை செய்தாலும், அது எங்களுக்கு தலைவலியாக மாறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தி.மு.க., கூட்டணியில், புதிய கட்சிகள் இணைந்ததால், உரிய அளவில் தொகுதிகளை பங்கிட வேண்டிய சூழலும் தேவையும் இருக்கிறது.
நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் வி.சி.க., – இ.கம்யூ., – மா.கம்யூ., – ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களுடனும் ஆலோசித்தே, தொகுதி பங்கீடு ஒப்பந்தங்கள் நிறைவேறின.
கூட்டணியின் வெற்றியே பெரிது என்பதை கூறி, ம.நீ.ம., தலைவர் கமல் வெளியிட்ட அறிக்கையை வரவேற்கிறேன். தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்படாதா, பிளவு உருவாகாதா, என நினைத்த சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானதால், தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களை பரப்ப முயற்சி செய்கின்றனர்.
நேர்காணல் என்பது தலைமைக்கும் தொண்டர்களுக்குமான உறவின் வெளிப்பாடு. இந்த முறை, 16,500 பேர் பங்கேற்றதால், மாரத்தான் ஓட்டத்தைப்போல ஒவ்வொரு நாளும் 10 மணி நேரத்திற்குக் குறையாமல் நேர்காணல் நடந்தது. கட்சியினர் தந்த உறுதியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் தி.மு.க., சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் என, 2026 தேர்தல் களத்தில், 175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது. இதுபோல, கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி நட்சத்திரம், பானை, ஏணி ஆகியவையும் நம் சின்னங்கள்தான்; 234 தொகுதிகளும் நம் தொகுதிகள்தான். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை’ – அ.தி.மு.க.
புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை’ என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: த.மா.கா., தலைவர் வாசன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோருடன் பேச்சு நடக்கிறது. தொகுதி பங்கீடு இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. இன்னும் ஓரிரு நாளில் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்படும்.
இனி, புதிய கட்சிகள் வர வாய்ப்பு இல்லை. புதிய தமிழகம் கட்சியுடன் கூட்டணியை இறுதி செய்ய முடியவில்லை. அவர் கேட்பதும் நாங்கள் சொல்வதும் சரிப்பட்டு வரவில்லை. அ.தி.மு.க., அலுவலகத்தில் இருந்து, மயிலாப்பூர் தொகுதி தான் பக்கமாக உள்ளது. அதனால், அங்கிருந்து பிரசாரத்தை துவக்குகிறேன். தி.மு.க., ஆட்சியில், செய்தியாளர்கள் தாக்கப்படுவது வாடிக்கையாக நடக்கிறது.
சசிகலா, ராமதாஸ் அமைத்திருக்கும் கூட்டணியால், எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தி.மு.க., கூட்டணியில் வி.சி., தலைவர் திருமாவளவனும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் வேதனையில் இருக்கின்றனர். ஆனால், நாங்கள் உணர்வுபூர்வமாக கூட்டணியில் உள்ளோம். கடந்த முறையை விட, நாங்கள் குறைவான இடங்களில் போட்டியிடுவது பின்னடைவு இல்லை.
சூழ்நிலைக்கு ஏற்றவாறு தான் போட்டியிட முடியும். இதில் அதிகம், குறைவு என்ற பேச்சு இல்லை. தி.மு.க.,வே குறைவான இடங்களில் தான் போட்டியிடுகிறது. தேர்தல் களத்தில் நாங்கள் தான் வேகமாக செயல்படுகிறோம்.