சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 20 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகத்துவாரம் பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட நபரொருவரை கைதுசெய்து அவரது வீட்டை சோதனையிட்ட போதே இந்த வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அதன்போது இந்த வெளிநாட்டு சிகரட்டுகளை கொண்டுவந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளின் மொத்த பெறுமதி 16 இலட்சம் ரூபா ஆகும்.