மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் வெள்ளிக்கிழமை (12) மாலை மன்னாரை வந்தடைந்தனர்.

மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்காலில் இருந்து இரண்டு இளைஞர்கள் நடைபயணம் ஒன்றை கடந்த புதன்கிழமை (10) ஆரம்பித்தனர்.
அவர்கள் முல்லைத்தீவிலிருந்து கால்நடையாக செல்வதோடு துண்டு பிரசுரங்களை வீதி ஓரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் வெள்ளிக்கிழமை (12) மாலை 6 மணியளவில் மன்னார் தள்ளாடி சந்தியை வந்தடைந்தனர்.
- தித்வா புயல் தாக்கிய இலங்கைக்கு உதவ தமிழகம் தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- அல்பிரட் அருள்தாஸ் | புகழ் வணக்கம் | 28.11.2025
- இந்திய மத்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்தம் செய்து, கேரளா அரசு சட்டசபையில் மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
- பொருளாதாரத்தைப் பாதிக்காத வகையில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. – சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம்
- ஈழப்பிரியனின் “நாவுக்கரசன்” 25.01.2026 பெர்ன்
- அனுராவின் ஆட்சியிலும் இலங்கையில் மனித உரிமைக் கடமைகளை நிறைவேற்றுவதில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இந்த நிலையில் குறித்த இரு இளைஞர்களையும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் மற்றும் மன்னார் நகரில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து வரவேற்றனர்.
பின்னர் தள்ளாடி சந்தியில் இருந்து மன்னார் பஜார் பகுதி வரை குறித்த குழுவினர் நடை பயணமாக வருகை தந்து காற்றாலைக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு வினியோகித்தனர்.
