இதன்போது உணர்வு பூர்வமான சந்திப்பு ஒன்று அங்கே நடந்தது. அரசியல் கைதிகளை சந்தித்துவிட்டு கனத்த இதயத்துடனும் கண்களில் கண்ணீருடனும் அரசியல் கைதிகளின் உறவுகளும் நாங்களும் வெளியே வந்தோம் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை போகம்பரை சிறையில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறுகிய நேரத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் மகளை தந்தையான ஆனந்தசுதாகரன் தொட்டு உணவூட்டிய அந்த நிகழ்ச்சி சம்பவம் மனதை ரணமாக்கியது.
இந்த சந்திப்பானது நிரந்தரமாக இந்த பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டுமென இந்த நாட்டின் ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றோம்.
தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு கைதிகள் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்படுவது வழமை. ஆனால் இந்த ஆண்டு கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
தமது விடுதலை இடம்பெறும் என கைதிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். மீதமாக உள்ள பத்து அரசியல் கைதிகளும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என வினயமாக ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
- களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- ஊடக சுதந்திரத்தை பாதிக்கும் எந்த சம்பவங்களும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் – இலங்கை செய்தித்தாள் ஆசிரியர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
- சாவகச்சேரி உப தவிசாளரின் பதவி நீக்கம் ஜனநாயக விரோதமானது – பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
- இந்த ஆண்டு தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
- தொழிற்சங்க அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக முடிவுகள் எடுக்கப்படாது என்று இலங்கை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்தார்.
- இலங்கையில் சீரற்ற வானிலை; எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!