களுத்துறை, கெலிடோ வீதிப் பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், அப்பகுதியில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனத் தெரியவந்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை (03-02-2026) காலை களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 2 கிராம் 452 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த இவர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது, களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் பதிவாகியிருந்த பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் இவருக்குத் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்டிருந்த 03 ஜோடி காதணிகள் , ஒரு பதக்கம், ஒரு ஜே.பி.எல் (JBL) ஒலிபெருக்கி இயந்திரம் உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
- இலங்கை வானிலை அறிக்கை
- இலங்கையில் சீரற்ற வானிலை; எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்!
- ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதிக்கு DFCC வங்கி ரூ. 50 மில்லியனை நன்கொடையாக வழங்கியது.
- இலங்கையில் சில பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- “அரசாங்கத்தின் எதேச்சதிகார நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.” – சஜித்
- “கழிவற்ற நகர் – ஆரோக்கியமான வாழ்வு”
சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்காகவே இத்திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.