ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயர், சின்னம் மற்றும் நம்பகமான புகைப்படங்கள் அடங்கிய ஒரு போலி செய்தி வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் (முகநூல்) பரவி வருவதாக அறியப்படுகிறது.
அது, தங்கள் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டவை அல்ல என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, தனிப்பட்ட விபரங்கள் மற்றும் பணம் என்பவற்றை வாட்ஸ்அப் அல்லது வேறு சமூக ஊடகங்களினூடாக கேட்பதில்லை.
எனவே, சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
- தமிழீழமே என்ற கொள்கையில் வழுவாது நின்ற “மாமனிதர் தேனிசை செல்லப்பா” | த.ஒ.கு – பிரான்சு.
- வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு மில்லியன் பண மோசடி
- நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராப்பர் பாலேந்திர ஷா வெற்றி பெற்றார்.
- ஆண்டுகள் பதினேழு கடந்த போதும் – அணையவில்லை அந்த அழுகுரல்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
- யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள்
- திமுக அமைச்சர் நேரு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
இவ்வாறான போலி இணைப்புக்களுக்கு, உங்கள் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓ.டி.பி இலக்கம் மற்றும் வங்கி அட்டை விவரங்களைப் பகிர வேண்டாம்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ தொலைபேசி, வலைத்தளங்கள், செயலிகள் மற்றும் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் மட்டுமே நிறுவனம் மற்றும் அதன் சலுகைகள் குறித்து அறியமுடியும் என தெரிவித்துள்ளது.
