மத்திய கிழக்கின் வான்பரப்பு அநேகமான பகுதிகளில் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதன் காரணமாக, இன்றைய தினத்திற்குரிய அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
வான்பரப்பு மூடல் காரணமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பின்வரும் இருவழிப் பயணங்கள் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளன:
துபாய்: UL231/232 மற்றும் UL225/226
தோஹா: UL217/218
- இலங்கை மின்சார வாரியத்தின் 23,000 ஊழியர்கள் 4 அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவார்கள் – எரிசக்தி அமைச்சர்
- இலங்கை ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க புத்தசாசன அமைச்சினால் காண்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் தமிழ் மொழி காணப்படாமை தொடர்பில் அதிருப்தி
- மொனராகலையில் மூன்று பெரிய கஞ்சா தோட்டங்கள் சோதனை – 46,000 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டது
- கொரத்தொட்டை, மெனிக்காரா வீதியில் மூன்று பேருக்கு குறிவைத்து துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டனர்.
- இலங்கையில் ஊடகங்களை அடக்குவதற்கு பொலிஸார் முயற்சி – சாகர காரியவசம் குற்றச்சாட்டு
- அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான நமது உறவுகளையும் நாம் பாதுகாக்க வேண்டும்.
தம்மாம்: UL253/254
ரியாத்: UL265/266
குவைத்: UL229/230
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கைக்கு வரும் மற்றும் இலங்கையிலிருந்து புறப்படும் மொத்தம் 54 விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் இலங்கைக்கு வரவிருந்த 28 விமானச் சேவைகளும், இங்கிருந்து புறப்படவிருந்த 26 விமானச் சேவைகளும் அடங்குவதாக விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தத் திடீர் இரத்துச் செய்திகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். மேலதிக விபரங்கள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளுமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.