அட்டன் – நோர்டன்பிரிட்ஜ் பிரதான விதியில் காசில்ரீ பகுதியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததால் தடைபட்டிருந்த போக்குவரத்து சனிக்கிழமை (13-12-2025) முதல் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த பாலத்தில் உள்ள இணைப்புகளும் ஏற்கனவே பழுதாகி இருந்தது மேலும் சமீபத்தில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக காரணமாக கடுமையாக சேதம் அடைந்து கடந்த மாதம் (29) பாலம் இடிந்து விழுந்தது, அன்று முதல் குறித்த வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டது.
அதன் பின்னர் பல்லேகெலே இலங்கை இராணுவத்தின் 31வது இராணுவ பொறியியல் படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பொறியியல் பிரிவுடன் இணைந்து 15 மீட்டர் நீளமுள்ள புதிய இரும்பு பாலத்தை பொருத்தும் பணிகள் முழுவதும் முடிவடைந்து உள்ளது.
எனவே பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து சனிக்கிழமை (13-12-2025) முதல் போக்குவரத்துக்கு திறக்கப்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.
- அனுர குமார அரசு பௌத்த சாசனத்தைச் சீர்குலைக்க முயற்சிக்கிறது; சிங்கள ராவய குற்றச்சாட்டு.
- “இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக” அக்குரெஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.
- இங்கிலாந்து தொடருக்கான இலங்கை T20 அணியை அறிவிப்பு – தசுன் ஷானகா மீண்டும் கேப்டனாக தொடர்கிறார்
- 84 ஈரானிய கடற்படை வீரர்களின் உடல்களை தூதரகத்திற்கு கையளிக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
- காலி, அக்மீமன பகுதியில் வாடகை வீட்டில் ‘குஷ்’ கஞ்சா பயிரிட்டதற்காக பெலாரஷ் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.