இலங்கையில் தங்குவதற்கான விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள், பம்பலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் இன்று திங்கட்கிழமை (04-05-2026) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 48 பேர், சீன ஜாதியினர் 02 பேர் என மொத்தமாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 33 ஆண்களும் 17 பெண்களும் உள்ளடங்குவதோடு, கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாவர்.
- 84 ஈரானிய கடற்படை வீரர்களின் உடல்களை தூதரகத்திற்கு கையளிக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
- கலட்டி பகுதியில் 50 போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது
- “சோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்ட கொள்கலன்களின் தெரியாத உள்ளடக்கங்கள் குறித்து மக்கள் கவலை.” – கவிந்த
- இலங்கையில் நீதியின் சீரழிவு
- இலங்கை ஜனாதிபதி: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க சிறந்த ஒருங்கிணைப்பு பராமரிக்கப்பட வேண்டும்.
- இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது வெலிசர தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், அவர்களை விரைவாகத் தத்தமது நாடுகளுக்கு நாடுகடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.